விஜய் டிவியில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இத்தொடர் தொடக்கத்திலிருந்தே திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியின் டிஆர்பி எப்போதும் முதல் இடத்தில் இருப்பது பாரதிகண்ணம்மா தொடர். இதற்கு முக்கிய காரணம் இத்தொடரில் வில்லியாக நடிக்கும் ஃபரீனா அசாத்.

பாரதிகண்ணம்மா தொடரில் கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களிடையே எவ்வளவு பிரபலமோ அதே அளவு வில்லி வெண்பா கதாபாத்திரமும் மிகவும் பிரபலம். தன்னுடைய நடிப்பு திறமையால் வெண்பா அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். ஃபரினா ஆரம்பத்தில் தொகுப்பாளராக பணியாற்றி பின்பு சின்னத்திரை தொடர்களில் நடிக்க தொடங்கினார். ஆனால் இவருக்கு பாரதிகண்ணம்மா தொடர்தான் மிகப் பெரிய புகழை வாங்கிதந்தது.

ஃபரினா அசாத் கடந்த 2017இல் ரஹமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஃபரினா திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கர்ப்பமாக இருந்தார். இவர் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருப்பார். ஃபரீனா அவருடைய கர்ப்ப காலங்களில் விதவிதமாக போட்டோ சூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். சமீபத்தில் இவருக்கு கோலாகலமாக வளைகாப்பு நடைபெற்றது. இதில் ஃபரினா உடன் நடித்த சின்னத்திரை நடிகர்கள் கலந்து கொண்டார்கள்.

ஃபரினா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பொழுதும் பாரதிகண்ணம்மா தொடரில் இருந்து விலகாமல் நடித்துக் கொண்டிருந்தார். இத்தொடரில் தற்போது வெண்பா கைது செய்யப்பட்டது ஜெயிலில் இருப்பது போல் காட்டப்படுகிறது. இதனால் பரினா பிரசவத்திற்குப் பின் சிறிது இடைவெளிக்கு எடுத்து மீண்டும் பாரதிகண்ணம்மா தொடரில் நடிப்பார் என கருதப்பட்டது.

இந்நிலையில் நேற்று பரீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தச் செய்தியை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஃபரினா வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.