விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா நெடுந்தொடர் பல அதிரடியான திருப்பங்களோடு ஒளிபரப்பாகி வர, இனி மேலும் பல புதிய திருப்பங்கள் ஏற்பட காத்துள்ளன. அப்படிப்பட்ட விதமாக சீரியலின் ஆரம்பத்தில் கண்ணம்மாவை திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டி பாரதியை கொலை செய்ய முயன்று பின் சிறை சென்றவர் முன்னாள் வில்லன் மாயாண்டி.

தற்பொழுது மாயாண்டி சிறையிலிருந்து ரிலீசாகி மீண்டும் வில்லனாக ரீ என்ட்ரி கொடுக்க போகிறார். அதாவது வெண்பா சிறைக்கு செல்கையில் அங்கு சிறையிலிருந்த மாயாண்டியை சந்திக்கிறாள். பின் அவன் கண்ணம்மாவின் மாமா என்பதை அறிந்து அவனுடன் இணைந்து இனி கண்ணம்மாவை பழிவாங்க திட்டமிடுகிறாள் வெண்பா.

மாயாண்டி சிறையில் இருந்து விடுதலையாக போவதைத் தெரிந்து அவனிடம், வெண்பா என் வீட்டிற்கு செல். அங்கு என் வேலைக்காரி சாந்தி உனக்கு கண்ணம்மாவை பழிவாங்க உதவி செய்வாள் என ஒரு புதிய சூழ்ச்சி வலையை கண்ணம்மாவிற்கு எதிராக சிறையிலிருந்து வலை விரிக்கிறாள் வெண்பா.

அதைத்தொடர்ந்து ஜெயிலிலிருந்து ரிலீசான மாயாண்டி நேராக வெண்பாவின் வீட்டிற்கு சென்று அங்கு வெண்பாவின் வேலைக்காரி சாந்தியை சந்திக்கிறான். பின் அவளிடம் வெண்பாவை சந்தித்தது பற்றியும், கண்ணம்மாவால் தான் சிறைக்கு சென்று பட்ட துன்பத்தையும் கூறினான்.

பிறகு, இனி நீ, வெண்பா, நான் என நாம் மூவரும் சேர்ந்து கண்ணம்மாவை பழிவாங்க வேண்டுமென சாந்தியிடம் சொல்கிறான் மாயாண்டி. ஏற்கனவே கண்ணம்மாவிற்கு வெண்பா மட்டும்தான் குடைச்சல் தந்தால், இனி மாயாண்டியை வைத்து வெண்பா பின்புலத்தில் செயல்பட்டு கண்ணம்மாவிற்க்கு குடைச்சல் தர தயாராகின்றார்.

மேலும் பரினாவிற்கு பிரசவ நேரம் நெருங்கி விட்டதால் சீரியல் இருந்து சில மாதம் ஓய்வெடுக்க வாய்ப்பிருக்கிறது. எனவே பாரதிகண்ணம்மா சீரியலில் வரவிருக்கும் அதிரடி திருப்பங்களை பொறுத்திருந்து பார்க்கலாம்.