வீட்டுல விசேஷங்க படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த ஆர்ஜே பாலாஜி.. கல்லா கட்ட போகும் போனிகபூர்

ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா துறைக்கு வந்த முக்கியமான நடிகர்களுள் ஒருவர் ஆர் ஜே பாலாஜி. இவர் ஆரம்பத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். இதை தொடர்ந்து இவரே கதாநாயகனாக எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதைத் தொடர்ந்து தற்போது வீட்டுல விசேஷங்க படத்தில் ஆர் ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் போனி கபூர் தயாரிப்பில் 2018ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான இந்தி திரைப்படமான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படம் ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

வீட்டுல விசேஷங்க படத்தில் ஆர்ஜே பாலாஜி ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்த உள்ளனர். வீட்டுல விசேஷங்க என்ற பெயரில் ஏற்கனவே பாக்கியராஜின் படம் வெளியாகி இருந்தது. தற்போது அவரிடம் அனுமதி வாங்கிய பிறகு இப்படத்தில் அந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. கல்யாணமான புது தம்பதிகள்யிடம் குழந்தை உண்டானதா என்பதை பலரும் வீட்டில் ஏதும் விசேஷம் உண்டா என்று கேட்பார்கள். தற்போது இப்படத்தின் போஸ்டரில் ஊர்வசிக்கு வளகாப்பு நடைபெறுவது போல பின்னால் சத்யராஜ், ஆர் ஜே பாலாஜி இருவரும் உள்ளனர்.

இதனால் பல வருடங்களுக்கு பிறகு இவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது போன்ற கதையை மையமாகக் கொண்டு நகைச்சுவையாக எடுக்கப்பட்ட படமாக வீட்டுல விசேஷங்க படம் இருக்கலாம். இப்படம் ஜூன் 17 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் ஆர்ஜே பாலாஜி மற்றும் சத்யராஜ் காமெடி வேற லெவல் இருக்கும் என கூறப்படுகிறது.

அஜித்தின் வலிமை படம் போனி கபூருக்கு மிகப்பெரிய வசூலை பெற்று தந்த நிலையில், தன்னுடைய ஹிட் படமான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக் வீட்டுல விசேஷங்க படமும் வணிகரீதியாக போனி கபூருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தர அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் போனிகபூர் தொடர்ந்து தமிழ் படங்களை இயக்க ஆர்வம் செலுத்தி வருகிறார்.