வீடியோ காலில் வெறுப்பேற்றிய சமையலம்மா.. உச்சகட்ட கடுப்பில் வெண்பா!

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் இவ்வளவு நாள் சமையலம்மாவாக இருந்த கண்ணம்மா, தற்போது பாரதி வேலை செய்யும் மருத்துவமனையிலேயே அட்மின் ஆபீஸராக பணிபுரிகிறாள். மேலும் ஒவ்வொரு நாளும் ஹேமாவிற்கு மதிய உணவு எடுத்துச் சென்று ஊட்டிவிட்ட கண்ணம்மா, திடீரென்று இந்த வேலைக்கு சேர்ந்து விட்டதால் கண்ணம்மாவை நினைத்து ஹேமா ஏங்குகிறாள்.

இதனால் சௌந்தர்யா, லட்சுமி மற்றும்ஹேமா இருவரையும் கண்ணம்மா வேலை செய்யும் மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார். அதன்பிறகு பாரதியை பார்த்த ஹேமா அவரிடம் இருந்து போனை வாங்கி அதில் விளையாடிக்கொண்டே சமையலம்மாவுடன் சேர்ந்து சாப்பிடலாம் என போனை பாரதியிடம் இருந்து வாங்குகிறாள்.

அந்த சமயம் பாரதிக்கு வெண்பா போன் செய்ய, உடனே ஹேமா கண்ணம்மாவிடம், ‘வெண்பா ஆன்ட்டி அடிக்கடி போன் செய்து என்னுடைய அப்பாவை டென்ஷனாகி விடுகிறார். இனிமேல் அவர் என் அப்பாவிற்கு போன் செய்யக்கூடாது என ஸ்ட்ரிக்டாக சொல்லிவிடுங்கள்’ என்று பாரதியின் போனை கண்ணம்மாவிடம் கொடுத்துவிட்டு ஹேமா லஷ்மி அழைத்ததால் சென்று விடுகிறாள்.

எனவே தொலைபேசியில் மறுபுறம் இருக்கும் வெண்பா, வீடியோ காலில் கண்ணம்மாவை பார்த்ததும் ஷாக்காகுகிறாள். ஏற்கனவே வெண்பாவை பாரதி கண்முன்னே போலீஸ் அழைத்துச் சென்றதால், அதன் பின் விடுதலை செய்த பின்பு கூட அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட பாரதி இன்றுவரை கேட்கவில்லை என வெண்பா புலம்பிக் கொண்டிருக்கிறாள்.

இந்த நேரத்தில் கண்ணம்மா பாரதியின் போனில் வந்ததால் வெண்பா உச்சகட்ட கடுப்பாகி இருக்கிறாள். சாதாரணமாகவே வெண்பாவை வெறுப்பேற்றும் கண்ணம்மா தற்போது போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் வெண்பா ஏறி இறங்கியதை வைத்து வச்சு செய்யப் போகிறாள்.

அதுமட்டுமின்றி புதிதாக வெண்பாவின் அம்மா வெண்பாவிற்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் அதை வைத்தும் கண்ணம்மா வெண்பாவை கலாய்க்க போகிறாள். எனவே  இன்று ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா வெண்பா மோதிக்கொள்ளும் தரமான சம்பவத்தை பார்க்கப்போகிறோம்.