விவேகம் பார்ட்-2 வா.? வலிமை க்ளிம்ஸ் வீடியோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தை அவரது ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருந்தனர். அதற்காக வலிமை படக்குழு அவ்வப்போது ஏதாவது ஒரு அப்டேட்டை வெளியிட்டு வந்தது. இருப்பினும் ரசிகர்கள் திருப்தி அடையாமல் தொடர்ந்து வலிமை படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை கேட்டு வந்தனர்.

இப்படத்தில் தெலுங்கு நடிகரான கார்த்திகேய கும்மகொண்டா வில்லனாக நடித்துள்ளதால் தெலுங்கு சினிமாவிலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புஅதிகரித்துள்ளது. ஆனால் தொடர்ந்து படக்குழு படத்தின் அப்டேட் வெளியிட தயக்கம் காட்டி வந்தனர். அதற்கு காரணம் படத்தின் ஒரு சில காட்சிகள் எடுக்கவேண்டி இருந்தது.

தற்போது வலிமை படத்தின் அனைத்து காட்சிகளையும் எடுத்து முடித்துள்ளார். அதனால் படக்குழு படத்தினைப் பற்றிய ஒரு சில சுவாரசியமான தகவல்களை வெளியிட்டு வந்தது. சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்ற நாங்க வேற மாதிரி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது அந்த வரிசையில் வலிமை படத்தின் கிலிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆனால் இதனை 6.03 மணி அளவில் வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் 6.30மணி அளவில்தான் வீடியோ வெளியானது. இதனால் நெட்டிசன்கள் பலரும் வலிமை படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாவதற்கு முன்பு விவேகம் படத்தின் காட்சிகளை வெளியிட்டு ட்ரெண்டிங் செய்தனர்.

தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வலிமை படம் அடுத்த விவேகம் படம் என ஒரு சில ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். மேலும் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட ஒரு சில காட்சிகளை வைத்து வலிமை படம் எடுத்துள்ளதாகவும் கூறிவருகின்றனர். ஆனால் அஜித் ரசிகர்கள் வலிமை படம் வெளியிட்டுள்ள கிலிம்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகின்றனர்.

பிக்பாஸ் அல்டிமேட்டில் முதலைக்கண்ணீர் வடிக்கும் வத்திக்குச்சி வனிதா.. என்னா நடிப்புடா சாமி!

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 14 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இரண்டே வாரத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, விறுவிறுப்புடன் நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ...