தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. தற்போது பிசியாக ஒரு பல படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக விவாகரத்து வதந்திகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகின. இதற்கு சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் மௌனம் காத்து வந்தனர்.

இருப்பினும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக வலைதள நெட்டிசன்கள் அனைவரும் சமந்தாவின் விவகாரத்து செய்திகளையே விவகாரமாக பதிவு செய்து வந்தனர். ஒரு தரப்பினர் பிரிந்து சமந்தா வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியிட்டன. மற்றொரு தரப்பினர் இவர்களுக்குள் இடையே கருத்து வேறுபாடு என கூறி வந்தனர்.

ஆனால் சமந்தாவிடம் சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் விவாகரத்து பற்றி கேட்டதற்கு, இதைப் பற்றி கேட்க வேண்டாம் என கூறிவிட்டு சென்றார். அப்போதே பலரும் சமந்தா விவாகரத்து செய்வது உறுதி என கூறி வந்தனர். ஆனால் தற்போது சமந்தா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் நாக சைதன்யாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் நாங்கள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தோம், இனிமேல் எங்களால் இணைந்து வாழ முடியவில்லை. மேலும் எந்த ஒரு வெறுப்பும் இல்லாமல் நட்புடன் பிரிவதாக கூறியுள்ளார். தற்போது இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் ஒரு சில ரசிகர்கள் இவர்கள் இருவரும் அழகான ஜோடி அப்படி இருக்கும்போது ஏன் பிரிக்கிறீர்கள். எல்லாத்துக்கும் தீர்வு உண்டு உங்கள் இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனையை சமரசமாக பேசி முடிவு எடுத்து இருக்கலாம் என கூறி வருகின்றனர். மேலும் நீங்கள் இருவரும் இணைந்து வாழ விரும்புவதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.