தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் பெண்ணான இவர் தெலுங்கு சினிமாவில் தனது வெற்றிக் கொடியை நிலைநாட்டியது மட்டுமல்லாமல், தெலுங்கு தேசத்திற்கு மருமகளாகவும் சென்றுள்ளார். சென்னை பெண்ணாக சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

ஆரம்ப காலத்தில் மிகவும் மகிழ்ச்சியாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கையில் சமீபகாலமாக தொடர்ந்து பிரச்சனைகள் நிலவி வருகிறது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா வட்டாரங்களில் மிகவும் ஹாட் டாப்பிக் என்றால் அது சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் பிரச்சினை தான். இவர்கள் இருவர் குறித்த பல்வேறு செய்திகள் மீடியாக்களில் உலா வருகின்றன.

திருமணத்திற்கு பின்னரும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் அதிக கவர்ச்சி காட்டி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப் தொடரில் அளவுக்கு மீறிய கவர்ச்சியில் நடித்திருந்தார். இதனால் சமந்தாவிற்கும் அவரது மாமனார் நாகார்ஜுனா குடும்பத்திற்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் இனி இதுபோன்ற காட்சிகளில் நடிக்கக்கூடாது என கண்டித்ததாகவும் தெரிகிறது.

தற்போது நாகசைதன்யா நடித்து, சேகர் கம்முலா இயக்கத்தில் லவ் ஸ்டோரி என்ற படம் செப்டம்பர் 24-ஆம் தேதியன்று  திரையரங்கில் வெளிவர உள்ளது. இந்நிலையில் தன்னுடைய படத்தின் விளம்பரத்திற்காக செய்தியாளர்களை சந்தித்த நாகசைதன்யா பத்திரிக்கையாளர்களிடம் படத்தை பற்றி மட்டும் கேள்வி கேட்க வேண்டும். சமந்தாவை பற்றி எந்த கேள்வியும் கேட்கக் கூடாது என்று கறாராக கூறியுள்ளார்.

அதனை ஒத்துக் கொண்ட பத்திரிகையாளரிடம் மட்டுமே நாகசைதன்யா பேசியுள்ளார். அத்துடன் நடிகை சமந்தா தனது வலைத்தளத்தில் ‘சமந்தா அக்கினேனி’ என்றிருந்த பெயரில் ‘அக்கினேனி’ என்ற பெயரை அகற்றிவிட்டு ‘சமந்தா’ என்று வைத்துக்கொண்டார். அன்றிலிருந்து, இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று தகவல் வெளியாகி வருகிறது.

நாக சைதன்யா சமந்தாவை சேர்த்து வைக்க இவர்களது குடும்பத்தினர் முயன்று கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகிறது. ஆனால், நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் இதனை பற்றி எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருவரும் வெளிப்படையாக பதில் அளிப்பதன் மூலம் விவாகரத்து கிசுகிசுப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். ஆனால் அதை செய்ய இருவரும் தயாராகவில்லை.