விவாகரத்து பத்திரத்தில் பாக்யா கையெழுத்துப் போட்டு விட்டாரா? நாசுக்காக காய் நகர்த்திய ராதிகா!

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, கல்லூரியில் காதலித்த ராதிகா உடன் சேர்ந்து வாழ கோபி முடிவெடுத்துள்ளார். இதற்காக ஏற்கனவே திருமணம் ஆன ராதிகா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துகொண்டதால் கோபியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்.

இதனால் கோபியையும் அவருடைய மனைவி இடம் விவாகரத்துப் பெறுமாறு அடிக்கடி வலியுறுத்துகிறார். அதன் காரணமாக வக்கீல் நோட்டீஸ் உடன் வீட்டிற்கு சென்று பாக்யாவிடம் கையெழுத்து வாங்க கோபி முயற்சிக்கிறார்.

ஆனால் எப்படி விளக்கமளித்து கையெழுத்து வாங்கப் போகிறோம் என தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் கோபிக்கு, ராதிகா அடிக்கடி தொலைபேசியில் அழைத்து உங்கள் மனைவியிடம் கையெழுத்து வாங்கி விட்டீர்களா என்று நச்சரித்துக் கொண்டே இருக்கிறார்.

ஆகையால் சமயம் பார்த்து பாக்யாவிடம் எதுவுமே சொல்லாமல் இதில் ஒரு கையெழுத்து மட்டும் வேண்டும் பாக்யா என்று தன்மையுடன் பேசி விவாகரத்து பத்திரத்தில் கோபி பாக்யாவிடம் கையெழுத்து வாங்கி விட்டார்.

அதன் பிறகு என்ன காரணத்திற்காக கையெழுத்து கேட்கிறீர்கள் என்று ஏன் கேட்கவில்லை என்றும் பாக்யாவிடம் கோபி கேட்கிறார். அதற்கு பாக்யா, ‘நீங்க தானே கையெழுத்து கேக்குறீங்க உங்களிடம் எப்படி எதற்காக கையெழுத்து என்பதை கேட்க முடியும்’ என்று கோபியின் மீது பாக்யா வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை வெளி காட்டுகிறார்.

அந்த சமயத்தில் குற்ற உணர்ச்சி ஏற்பட்டாலும் கோபி தன்னுடைய காரியம் சாதித்துக் கொண்டதாக உள்ளுக்குள் சந்தோசப்படுக்கிறார். இதன்பிறகு பாக்யாவிற்கு ராதிகா வில்லியாகமாறி கோபியை திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.