விவாகரத்து சர்ச்சைக்கு பதிலளித்துள்ள பிரியாமணி.. இனியாவது கவர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரியாமணி. இவர் ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து ‘பருத்திவீரன்’ படத்தில் ‘முத்தழகு’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது.

பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரைத் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பிரியாமணி சினிமாவில் நடித்து வந்தார். அதன்பிறகு, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும், வெப் சீரிஸல் கவனம் செலுத்தி வந்தார்.

சமீபத்தில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் பிரியாமணி நடித்திருந்தார். தேசிய விருது பெற்ற அசுரன் படம் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அசுரன் படத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் பிரியாமணி தெலுங்கில் நடித்திருந்தார். இப்படத்தில் பிரபல நடிகர் வெங்கடேஷ் ஜோடியாக பிரியாமணி நடித்திருந்தார்.

இப்படம் வெளியாகும்போது கொரோனா காலகட்டம் என்பதால் திரையரங்குகளில் வெளியிடாமல் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் பிரியாமணியின் கணவர் முஸ்தபா ஏற்கனவே திருமணமானவர் என்றும் அதை மறைத்து பிரியாமணியை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி வெளியானது. இதைத் தவிர பிரியாமணி சில நாட்களாக கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

நடிப்பிலும் கவர்ச்சி காட்டுவது என்பது போன்ற சர்ச்சையையும் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விரைவில் முஸ்தபாவை பிரியாமணி விவாகரத்து செய்யப் போகிறார் என்றும் வதந்திகள் வந்தது. இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக உள்ள பிரியாமணி இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.

இந்த வதந்திகளுக்கு நீண்டகாலம் மௌனம் சாதித்து வந்த பிரியாமணி தீபாவளியன்று கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் ஒட்டுமொத்த வதந்திகளுக்கு பிரியாமணி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

திருமணமான கையோடு.. புது சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ஸ்ரேயா அஞ்சன்!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலின் மூலம் ரீல் ஜோடியாக நடித்த சிந்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இருவரும், இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். சில ...