விவாகரத்து உறுதியானவுடன் முதல் வேலையா பெயரை மாற்றிய சமந்தா.. அதுக்குன்னு இவ்வளவு ஸ்பீட் ஆகாது

நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அக்கினேனி குடும்பத்தின் மருமகளான பின்னும் இவர் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். சில நாட்களாகவே நாகசைதன்யா, சமந்தா இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

சமந்தா கவர்ச்சியாக நடிப்பதே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. தற்போது சமந்தா தன்னுடைய விவாகரத்து செய்தியை ஊடகங்களுக்கு வெளிப்படையாக தெரிவித்தார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தத்தினை தெரிவித்தனர்.

சமந்தாவின் இந்த அறிவிப்புக்கு பின்னர் பல விதமான செய்திகள் ஊடகங்களில் வலம் வருகின்றன. தற்போது சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்த சமந்தா அக்கினேனி என்னும் பெயரை நீக்கி ‘Samantha’ என்று மாற்றியுள்ளார்.

ஹைதராபாத்தில் வசித்து வரும் சமந்தா தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

பாலிவுட்டையே மிரள வைத்த ஆண்டவர்.. 9 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத சாதனை

தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு அடுத்தபடியாக நடிப்பு அரக்கன் என்று போற்றப்படும் பெருமைக்குரியவர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவின் தூணாக இருக்கும் இவர் பல புதிய தொழில்நுட்பங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். இவர் அளவுக்கு யாராலும் சினிமாவை ...
AllEscort