விவாகரத்து ஆனா என்ன.. காசு தான் முக்கியம் என காய் நகர்த்திய சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணமாகி நான்கு வருடங்கள் ஆன நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமீபத்தில் மனமொத்து பிரிந்துவிட்டனர். இந்த செய்தி சினிமா வட்டாரத்தையே ஒரு உலுக்கு உலுக்கியது. வழக்கம்போல் இது வதந்தி தான் என அனைவரும் நம்பிய நிலையில் திடீரென இருவரும் பிரிந்தது எல்லோருக்குமே ஆச்சரியம் தான்.

இந்த விவாகரத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமேசான் தளத்தில் சமந்தா நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் தான். அதில் அநியாயத்திற்கு கவர்ச்சி கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இது நாகார்ஜுனாவின் குடும்பத்தில் புகைச்சலை உண்டாக்க அதுவே பெரிய பிரச்சினையாக மாறி இருவரும் பிரிந்துவிட்டதாக பத்திரிகைகளில் தினமும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருந்தாலும் சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவருமே அதைப் பற்றி கவலைப்படாமல் அடுத்தடுத்த தங்களுடைய படங்களுக்கான வேலைகளில் இறங்கி விட்டனர்.

அந்த வகையில் எடுத்ததாக சமந்தா நேரடியாக பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. பாலிவுட் படம் என்றாலே கொஞ்சம் அப்படி இப்படி நடிக்க வேண்டியிருக்கும். ஆனால் ஃபேமிலி மேன் சீரிஸ் பார்த்தபிறகு சமந்தா அதற்கெல்லாம் அஞ்ச மாட்டார் என்பது தெளிவாக தெரிகிறது.

மேலும் சம்பளமும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தி கேட்டுள்ளாராம். விவகாரத்திற்கு பிறகு நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்குமென தயாரிப்பாளர்களுக்கு கூறுகிறாராம்.