விழுந்து விழுந்து சிரிக்க வைத்த பாண்டியராஜனின் 6 படங்கள்.. இப்பவும் மவுசு குறையாத காமெடிகள்

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குனராக அனைவராலும் நன்கு அறியப்படுபவர் பாண்டியராஜ். இவருடைய பெரும்பாலான படங்கள் நகைச்சுவையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். அவ்வாறு ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த பாண்டியராஜனின் 6 படங்களை பார்க்கலாம்.

ஆன் பாவம் : பாண்டியராஜன் இயக்கத்தில் பாண்டியன், பாண்டியராஜன், சீதா, ரேவதி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆன் பாவம். இப்படத்தில் பாண்டியராஜன் மற்றும் அவர் பாட்டியாக நடித்த கொல்லங்குடி கருப்பாயி ஆகியோர் இடையே வரும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

வாய்க்கொழுப்பு : முக்தா சீனிவாசன் இயக்கத்தில் பாண்டியராஜன், கௌதமி, ஜனகராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வாய்க்கொழுப்பு. இப்படத்திற்கு சந்திரபோஸ் இசை அமைத்திருந்தார். வாய்க்கொழுப்பு படம் முழுநீள நகைச்சுவை படமாக எடுக்கப்பட்டு இருந்தது. ரசிகர் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

பாட்டி சொல்லை தட்டாதே : ராஜசேகர் இயக்கத்தில் பாண்டியராஜன், ஊர்வசி, மனோரமா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பாட்டி சொல்லை தட்டாதே. இப்படத்தில் பாண்டியராஜ் செல்வமாகவும், மனோரமா கண்ணாத்தா கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். பேரன், பாட்டிக்கு இடையேயான உறவை நகைச்சுவையாக இப்படம் காண்பிக்கப்பட்டு இருந்தது.

நெத்தியடி : பாண்டியராஜன் இயக்கத்தில் பாண்டியராஜன, வைஷ்ணவி, ஜனகராஜ், செந்தில், சண்முகசுந்தரி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நெத்தியடி. இப்படத்தில் பாண்டிராஜ் வேணு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது.

மனைவி ரெடி : பாண்டியராஜ் எழுதி, இயக்கி, நடித்த படம் மனைவி ரெடி. தேபாஸ்ரீ ராய், கே ஏ தங்கவேலு, ஆர் எஸ் மனோகர், மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் நண்பரின் திருமணத்திற்கு சென்று வேறு வழியில்லாமல் நண்பனின் தங்கையை திருமணம் செய்யும்படி ஆகிறது. அதன்பிறகு இவர் படும்பாடை நகைச்சுவையாக எடுத்த படம் மனைவி ரெடி.

தாய்க்குலமே தாய்க்குலமே : பாண்டியராஜ், ஊர்வசி, வினயா பிரசாந்த், வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தாய்க்குலமே தாய்க்குலமே. இப்படத்திற்கு கதை கே பாக்யராஜ் எழுதியிருந்தார். இப்படத்தில் தன் இரண்டாவது மனைவிக்கு இடையே மாட்டிக்கொண்டு முழிக்கும் பாண்டியராஜன் நகைச்சுவை ரசிகர்களை கவர்ந்தது.