விலையுயர்ந்த கார்களை வாங்கி குவிக்கும் விஜய் டிவி பிரபலங்கள்.. மத்திய அமைச்சரை விட அதிக வருமானமாம்.!

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி மக்களை மகிழ்விக்கும் விதமாக பல ரியாலிட்டி ஷோக்களை வழங்கி வருகிறது. இந்த ஷோக்ககளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபல தொகுப்பாளராக வலம் வருபவர்களில் மிகவும் முக்கியமானவர் என்றால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா தேஷ்பாண்டே தான். இவர் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை தவிர்த்து சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

பிரியங்காவை தவிர விஜய் டிவியில் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான மணிமேகலையும் தனியாக யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை விட அதிக அளவில் யூடியூப் சேனல் மூலம் வருமானம் ஈட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பல்கலைக்கழகங்களுக்கான பாடங்களை எடுத்து அந்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றி அதன் மூலம் சுமார் 4 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பதாக அவரே தெரிவித்துள்ளார். ஆனால் இவரை விட மிகவும் எளிமையான வீடியோக்களை மட்டும் பதிவு செய்து அதன் மூலம் லட்சக்கணக்கில் வருமானங்களை ஈட்டுவதில் நம்மூர் பிரபலங்களை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது.

சமீபத்தில் கூட ஒரு தொகுப்பாளினியின் பாத்ரூம் டூர் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் யூடியூப் மூலம் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்களில் முதல் இரண்டு இடத்தில் ஆங்கர் பிரியங்காவும், மணிமேகலையும் உள்ளனர். இவர்கள் அப்படி என்ன கண்டென்ட் போடுகிறார்கள் என்றுதானே கேட்கிறீர்கள். கண்டதெல்லாம் இவங்களுக்கு கண்டென்ட்தான்.

அப்படி இருந்தும் இவங்க இரண்டு பேருமே நிதின் கட்காரி சம்பாதிப்பதை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை அதுதான். பிரியங்கா மாதம் சுமார் ஏழு லட்சம் வரையும், மணிமேகலை சுமார் 6 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்களாம்.

இவ்வளவு வருமானம் வர அளவுக்கு அப்படி என்ன வீடியோதான் போடுறாங்கனு தான கேட்குறீங்க? ஆங்கர் பிரியங்கா சமைக்கறதுல ஆரம்பிச்சு அதை சாப்பிட்டு சாப்பிட்டது ஒத்துக்காம ஹாஸ்பிட்டல்ல அட்மிட ஆகுற வரைக்கும் நடக்கறத வீடியோவா போடுறாங்க. மணிமேகலை அவங்க கணவர் கூட சேர்ந்து வித்தியாசமான இடங்கள், மனிதர்களைத் தேடிச் சென்று வீடியோ எடுத்து வெளியிடறாங்க.

அவ்ளோதாங்க இதுக்கு தான் அவ்ளோ சம்பளம். முடிஞ்சா நீங்களும் ஒரு யூடியூப் சேனல் ஸ்டார்ட் பண்ணுங்க. சமீபத்தில் விஜய் டிவி பிரபலங்கள் விலையுயர்ந்த கார்களை வாங்கி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவன் வேற ரகம்.. பிக்பாஸ் போட்டியாளரை பக்கம் பக்கமாக வர்ணித்த VJ அஞ்சனா

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பிரபலமடைந்த விஜே அஞ்சனா. அதன் பிறகு பல முன்னணி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இவர் சமீப காலமாகவே தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு சோசியல் ...