விருது வழங்கும் விழாவிற்கு வித்தியாசமாக வந்த ரெஜினா.. மெர்சலாக பார்த்த சினிமா பிரபலங்கள்.!

ரெஜினா கசாண்ட்ரா, அண்மையில் நடைபெற்ற சைமா 2021 விருது நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அதில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் சோசியல் மீடியாவில் ரெஜினா ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். ரெஜினா தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னட மொழி சினிமாவில் நடித்து வருகிறார். ஸ்பிளாஷ் என்ற குழந்தைகளின் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்தார், அப்போது ரெஜினாவிற்கு 9 வயது.

பல குறும்படங்களில் நடித்து வந்த ரெஜினா, பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும் படத்திலும் நடித்துள்ளார். பின்பு அந்த படம் முழுநீள திரைப்படமாக 2012 இல் வெளிவந்தது. இதில் சித்தார்த் மற்றும் அமலாபால் நடித்து இருந்தார்கள்.

கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதில் லைலாவின் தங்கையாக நடித்திருப்பார். பின்பு அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம்,மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், சிலுக்குவார்பட்டி சிங்கம் படங்களில் நடித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, நந்திதா இவர்களுடன் நெஞ்சம்மறப்பதில்லை திரைப்படத்தில் ரெஜினா நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் முகில்,அருண்விஜயுடன் பார்டர், சூர்ப்பனகை திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. தெலுங்கிலும் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

ரெஜினா சைமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஆழமான நெக்லைன் கொண்ட பளபளப்பான உடையில் கவர்ச்சியாக வந்திருந்தார். தெலுங்கில் சிவா மனசுல சுருதி படத்திற்காக 2012இல் சிறந்த அறிமுக நாயகிக்கான சைமா விருது பெற்றுள்ளார்.