விரக்தியில் திரைத்துறையே வேண்டாம் என ஒதுங்கிய கலைஞர்.. சமாதானப்படுத்திய எம்ஜிஆர்

20 வயது முதல் இருந்தே தமிழ் சினிமாவில் சுமார் 75 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் கலைஞர் மு கருணாநிதி. இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் கால்பதித்த 5 முறை தமிழக முதல்வர் ஆன பெருமைக்குரியவர்.

15 நாவல்கள், 20 நாடகம், 15 சிறுகதை, 210 கவிதைகளையும் படைத்த மு. கருணாநிதி, ஒரு எழுத்தாளராக சினிமாவிலும் அவர் அளித்த பங்களிப்பு, இப்போது இருக்கும் இளம் தலைமுறைகளையும் வியக்க வைத்துள்ளது. இப்படிப்பட்டவர் ஒரு காலத்தில் சினிமாவை புறக்கணித்திருகிறார்.

1948 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அபிமன்யு என்ற படத்திற்கு வசனம் எழுதினார் கலைஞர். இவருடன் சேர்ந்து இந்தப் படத்திற்கு ஏ.எஸ்.ஏ. சாமியும் திரைக்கதை எழுதினார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘புது வசந்தமாமே வாழ்விலே’ என்ற பாடல் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்த படத்தின் மூலம்தான் புகழ்பெற்ற இசையமைப்பாளராக  எம்எஸ் விஸ்வநாதன் அறிமுகமானார். அபிமன்யு திரைப்படம் வெளியானதும் குடும்பத்துடன் தியேட்டருக்கு தன் பெயர் திரையில் வருவதை பார்க்க சென்ற கலைஞர் மு கருணாநிதிக்கு மிகுந்த ஏமாற்றம் தான் மிஞ்சியது.

அவர் பெயர் இடம் பெறவில்லை. ஏ.எஸ்.ஏ. சாமியின் பெயர் மட்டும் இடம்பெற்றிருந்தது. கருணாநிதி பெயர் திரைக்கதை எழுதியதாக படத்தில் இடம் பெறவில்லை. இதனால் கோபத்தில் தயாரிப்பாளரிடம் கேட்டதற்கு நீங்கள் பிரபலமான பிறகு உங்கள் பெயரை வெளியிடுகிறோம் என்று பதில் அளித்துள்ளார்.

இதனால் மிகுந்த ஆத்திரம் அடைந்த கலைஞர் திரைத்துறையே வேண்டாம் என மீண்டும் திருவாரூருக்கு குடும்பத்துடன் செல்வதாகத் திட்டமிட்டுள்ளார். அவரை சமாதானப்படுத்தி எம்ஜிஆர் தான் இருக்க வைத்துள்ளார். என்னதான் இவர்கள் இருவரும் அரசியலில் எதிரும் புதிருமாக பிற்காலத்தில் இருந்தாலும் ,சினிமாவில் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருந்திருக்கின்றனர்.

42 வயதிலும் முரட்டு சிங்கிளாக சுற்றி வரும் பிரேம்ஜி.. அதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணமா?

தமிழ் சினிமாவில் 40 வயதை கடந்த விஷால் போன்ற நடிகர்கள் இன்னும் திருமணம் ஆகாமல் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் பிரேம்ஜியும் ஒருவர். பல காலமாக இவர் திருமணத்தின் மீது நாட்டம் இல்லாமல் ...