விமான நிலையத்தில் அரைகுறை ஆடையில் வந்து இறங்கிய பூஜா ஹெக்டே.. ஜம்முனு வைரலாகும் புகைப்படம்.!

தளபதி விஜய் நடிப்பில் வளர்ந்து வரும் ஃபீஸ்ட் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக நடிகை பூஜா ஹெக்டே சென்னை வந்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன், பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2 மாதங்களாக சென்னையில் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து டெல்லியிலும் 5 நாட்கள் படப்பிடிப்பினை நடத்தினர்.

பீஸ்ட் படத்தினை சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரித்து வருகிறார். அனிருத் இந்தப்படத்திற்கு இசை அமைக்கிறார். பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வர இருக்கிறது. அதனால் இப்படத்தின் படப்பிடிப்பை நவம்பர் இறுதிக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது.

தற்பொழுது சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். அதில் கலந்து கொள்வதற்காக படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே சென்னை வந்துள்ளார்.

அவர் சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கும் பொழுது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இவரது க்யூட்டான இந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவாவுடன் முகமூடி திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். தற்பொழுது பூஜா ஹெக்டே இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

ருத்ர தாண்டவம் படத்தை போட்டுக் காண்பித்த மோகன் ஜி.. அதிர்ந்த அரசியல் பிரபலங்களின் விமர்சனம்

திரெளபதி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தான் ருத்ர தாண்டவம். இப்படம் வெளிவரும் முன்பே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. ருத்ர ...