தமிழ் சினிமாவில் ராமராஜன் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு ஏராளமான படங்கள் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தார். அப்போதெல்லாம் ராமராஜன் படங்கள் திரையரங்குகளில் ஆனால் மற்ற நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாது அந்த அளவிற்கு அனைத்து நடிகர்களும் ராமராஜன் உடன் மோத தயங்குவார்கள்.

வெற்றி படங்களை கொடுத்து வந்த ராமராஜன் ஒரு கட்டத்தில் பெரிய பெரிய அளவில் கதைகள் கவனம் செலுத்தாததால் ஒரு சில தோல்விப் படங்களைக் கொடுக்க ஆரம்பித்தார். அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் ஆரம்ப காலத்தில் ராமராஜன் பழைய இயக்குனருக்கு உதவி செய்ததால் ஒரு சில இயக்குனர்கள் மீண்டும் ராமராஜன் நடித்த படங்களை இயக்கினார்.

ஆனால் எந்த படங்களும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை அதன்காரணமாக சினிமாவை விட்டு விலகினார். அதன்பிறகு ராமராஜனுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வந்தும் படங்கள் நடிக்க தவிர்த்தார். ராமராஜன் நளினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஒரு கட்டத்திற்குப் பிறகு இவர்கள் இருவருக்கும் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக கூறினார். ஆனால் சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் ராமராஜனுக்கு இரண்டாவது திருமணம் செய்ய ஆசை இருந்தது அது நளினிக்கு தெரிய அதன் பிறகுதான் விவாகாரத்து இருவரும் பெற்றதாக கூறியுள்ளார்.

தற்போது வரை ராமராஜனுக்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் ராமராஜன் தற்போது ஹீரோவாக தான் நடிப்பேன் மற்ற குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என கூறி வருவதால் தற்போது வரை படங்களில் நடிக்காமல் தவிர்த்து வருகிறார். ஆனால் கூடிய விரைவில் ஒரு சில படங்களில் நடிப்பார் என அவரது சினிமா வட்டாரத்தில் இருப்பார்கள் கூறி வருகின்றனர்.