விபத்துக்கு பின், எழுந்து நடமாடும் யாஷிகா.. பிரபல நடிகருடன் செல்பி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மாடல் அழகி யாஷிகா ஆனந்த், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை-மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளார். இந்த விபத்தில் அவருடைய தோழியான பவானி என்ற பெண் பலியானார்.இதனால் யாஷிகாவின் மீது, காரை வேகமாக ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதியப்பட்டது.

கார் விபத்து ஏற்பட்ட பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் புகைப்படங்களை அழித்தார் யாஷிகா ஆனந்த். இதைத்தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன்முதலாக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் யாஷிகா.

அதில் தன்னுடைய தோழி பவானியை மிஸ் பண்றேன் என்றும், தன்னுடைய இடுப்பு மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது என்றும், இயற்கை உபாதை கூட படுக்கையில் தான், நல்லவேளை முகத்தில் எந்த காயமும் ஏற்படவில்லை என்று தன்னுடைய மனதை தேற்றிக் கொண்டுள்ளார் யாஷிகா.

கோரமாக நடைபெற்ற கார் விபத்திற்குப் பின்பு முதல் முதலாக தனது புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் யாஷிகா. இதில் காலில் கட்டுப்போட்டுக் கொண்டு படுத்த படுக்கையாக காட்சியளிக்கிறார். அத்துடன் எழுந்து சென்று சிறுநீர் போவதற்குக் கூட வலி இல்லாமல், யூரின் பேக் போட்டுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் கலங்கினர்.

இன்னிலையில் தற்போது யாஷிகா உடல்நலம் தேறி கொஞ்சம் கொஞ்சமாக நடக்கத் தொடங்கியுள்ளார். அவர் தற்போது படுக்கையிலிருந்து எழுந்து நடமாடும் அளவுக்கு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் நடிகர் அசோக் நடிகை யாஷிகாவை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் யாஷிகா எழுந்து நின்ற படி அவருடைய குடும்பத்தினரிடமும் அசோக் உடனும் செல்பி எடுத்துள்ளார்.