தமிழ் சினிமாவின் தற்போதைய கவர்ச்சி கட்டழகி நடிகையாக ஒரு சில மாதங்கள் முன்பு வரை வலம் வந்தவர் யாஷிகா ஆனந்த். சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவரது நடிப்பில் அடுத்ததாக கடமையைச் செய்கின்ற படம் வெளியாக உள்ளது.

இதில் எஸ் ஜே சூர்யா ஜோடியாக நடித்துள்ளார். கண்டிப்பாக இந்த படத்தில் இருவருக்கும் ரொமான்ஸ் காட்சிகள் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. யாஷிகா ஆனந்த் எப்போதுமே எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஜாலியாக சுற்றி வரும் கேரக்டர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். அப்படித்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து இரவு பார்ட்டிக்கு சென்று இருந்தார்.

பார்ட்டி முடிந்து வீடு திரும்பிய போது வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் அவரது நெருங்கிய தோழி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து யாஷிகா பெரிய அளவில் அடிபட்டு நடக்க முடியாமல் போய் அறுவை சிகிச்சை எல்லாம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறார் யாஷிகா ஆனந்த்.

சமீபத்தில் அவர் ஹாஸ்பிடலில் நடக்க கஷ்டப்பட்ட வீடியோ கூட வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அந்த சொகமே இன்னும் அவர்களுக்கு மனதை விட்டு நீங்காத நிலையில் தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்க்கும் போதே யாஷிகா ஆனந்த் இன்முகம் முன்னர் போல் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. விபத்து ஏற்பட்டதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது போலவும் அதனால் அவரது முகம் கொஞ்சம் கோணல்மாணலாக மாறிவிட்டதாகவும் ரசிகர்கள் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர். யாஷிகாவின் தற்போதைய பரிதாப நிலைமை

கஷ்டமான நிலையில் இந்த வீடியோவை வெளியிட்டு இருந்தாலும் விரைவில் பழையபடி திரும்பி வருவேன் என்ற நம்பிக்கை கொடுத்துள்ளார் யாஷிகா.