தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களின் பட்டியல்களில் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. ஏற்கனவே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்தத் தொடரில் மேலும் பல புதிய திருப்பங்கள் ஏற்பட காத்துள்ளன.

ராதிகாவையும், கோபியயும் கோயிலில் கண்ட ராமமூர்த்தி இவர்களை கண்டு அதிர்ந்து போகிறார். எனவே கோபியை கண்டித்து வைக்கிறார். மேலும் ராதிகாவிடம் இது குறித்துப் பேசி தீர்வு காண வேண்டுமென உணவு வழங்குவது போல் அவர் வீட்டுக்கு செல்ல, அங்கு ராதிகா பாக்யாவின் கணவரை பார்த்ததில்லை என கூற, அப்போதுதான் ராமமூர்த்திக்கு உண்மை தெரியவருகிறது.

ராதிகாவுக்கு கோபிதான் பாக்யாவின் கணவர் என்று தெரியாததும், இதனால்தான் கோபி பாக்யாவின் தோழியாக ராதிகாவை பார்க்க மறுக்கிறார் என்பதையும் கோபியின் தந்தை உணர்ந்துகொண்டார். உண்மையை வெளிப்படுத்த ராதிகாவிடம், என் மகனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் வீட்டிற்கு கட்டாயம் வாருங்கள் என்று ராதிகாவை அழைக்கிறார் ராமமூர்த்தி.

ஒருவேளை ராதிகாவிற்கு கோபி பற்றிய உண்மைகள் தெரிய வந்தால் பெரிய பூகம்பமே ஏற்பட்டு விடும். எனவே அவ்வளவு எளிதில் சீரியலில் உண்மையை கூறிவிட மாட்டனர். மக்களின் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் இன்னும் அதிகம் தூண்டி ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் கொடுப்பர்.

அப்படி ஒரு ட்விஸ்டாக வழக்கம்போல உண்மையை கூற வரும்போது ராமமூர்த்திக்கு ஏதாவது உடல்நிலை சரியில்லாதது போலவும் அல்லது விபத்து ஏற்படுவது போலவும் காட்ட அதிக வாய்ப்பு உள்ளதாக இணையதள வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இப்பொழுது ராதிகாவிற்கு உண்மை தெரியுமா? தெரியாதா? கோபி சிக்குவாரா மாட்டாரா? ராமமூர்த்திக்கு என்ன ஆகும்? என அனைத்தையும் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.