வித்தியாசமான நோயாளியாக நடிக்கும் விஜய்.. லீக்கான தளபதி 66 படத்தின் கதை

நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்து விஜய் தனது 66 வது படமான தளபதி 66 ல் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. தற்போது இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்வதில் படக்குழு பிசியாக உள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் விஜய் எரோட்டோமேனியா நோயாளியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எரோட்டோமேனியா என்பது ஒருவித மனநோய் ஆகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை யாரோ தீவிரமாக காதலிக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வார்கள்.

யாரும் தன்னைக் காதலிக்காத போதே இப்படி ஒரு எண்ணத்தில் அவர்கள் இருப்பார்கள். அப்படி ஒரு கதாபாத்திரத்தில் தான் விஜய் நடிக்க உள்ளார். இருப்பினும் இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

தளபதி 66 படத்தின் அப்டேட்கள் டிசம்பரில் வெளியிடப்படும் என்று இயக்குனர் ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது படத்தின் கதை பற்றிய செய்தி உலா வருவதால் இதற்கான விளக்கத்தை இயக்குனர் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக விஜய் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தளபதி 66 திரைப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும். மேலும் நடிகர் விஜய் முதன்முதலாக தெலுங்கில் நடிப்பதால் இதற்கான எதிர்பார்ப்பு சற்றே அதிகமாக உள்ளது.

பொறுங்க, அந்த படம் ரிலீஸ் ஆகட்டும்.. சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்த காத்திருக்கும் சமந்தா.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா மற்றும் சமந்தா. இவர்கள் இருவருக்கும் தனித்தனியாக நடிக்கும் படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது இவர்கள் இருவரும் இணைந்து காத்துவாக்குல 2 ...