பாய்ஸ் படம் வாயிலாக குண்டான ஜாலியான பையனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் நடிகர் நகுல். அதன்பிறகு உடல் எடையை கடுமையாக குறைத்து சிலிம் பிட்டாக மாறினார். காதலில் விழுந்தேன் படத்தில் முதல் முதலாக ஹீரோவாக நடித்தார்.

பின்னர்  மினிமம் கேரண்டி ஹீரோவாக மாறினார். எனினும் சமீபத்தில் நடித்த இவருடைய படங்கள் எதுவும் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. இன்றும் தனக்கென கோலிவுட்டில் இடம் பிடிக்க போராடி தான் வருகிறார்.

நகுல் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வாஸ்கோடகாமா. ஆர் ஜி கிருஷ்ணன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். தத்தோ பாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. குரங்கில் இருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்த அந்த கான்செப்ட் வைத்து இந்த போஸ்டரை டிசைன் செய்துள்ளனர்.

விரைவில் மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போஸ்டர் இணையத்தில் லைக்ஸ் குவித்து வருகிறது.