விட்டுக் கொடுத்த நயன்தாரா, அசுர வளர்ச்சியில் விக்னேஷ் சிவன்.. எதிர்பாராமல் நடக்கும் ட்விஸ்ட்

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. இவர்களின் திருமண தேதி எப்போது வெளியாகும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து காத்துள்ளனர். சமீபகாலமாக பல்வேறு கோவில்களுக்கு சென்று இருவரும் இணைந்து சென்று வழிபாடுகளும் நடத்தி வருகின்றனர்.

அண்மையில் நயன்தாரா தந்தையின் பிறந்தநாளை கொண்டாடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். நயன்தாரா தந்தை வெகுகாலமாக உடல்நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். தற்போது குணமடைந்துள்ள அவரின் முன்பு தான் தனது திருமண நடைபெற வேண்டும் எனவும் அதற்காகவே நயன் திருமணத்தை தள்ளிப்போட்டு வந்துள்ளார்.

இதனால் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் எனவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்து கொள்ளவும் நயன்தாரா முடிவு செய்துள்ளாராம். தனது காதலரான விக்னேஷ் சிவனின் வளர்ச்சியில் மட்டும் இனிமேல் பெரிதும் கவனம் செலுத்த உள்ளாராம்.

விக்னேஷ் சிவன் அண்மையில் நடிகர் அஜித்துடன் படம் பண்ண கமிட்டாகியுள்ளார். இதற்கு கூட நயன்தாரா தான் பெரும் பங்காற்றி உள்ளார். முதலில் விக்னேஷ் சிவனை அஜித்திடம் சிபாரிசும் இவரே செய்துள்ளார். அதன் அடிப்படியில் தன படம் கைக்கூடி உள்ளது.

நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோரும் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்ச்சர் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் லலித் குமார் தயாரித்து உள்ளனர். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. மேலும் அட்லீ இயக்கத்தில் ஹிந்தியில் ஷாரூகானுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

நெட்டிசன்கள் கூறுகையில் நயன்தாரா வளர்த்து விட விக்னேஷ் சிவன் வளர்கிறார் என்றாலும் தனித்திறமையால் தான் சினிமாவில் என்னவோ வெற்றி பெற முடியும் என கூறி வருகின்றனர். இருப்பினும் எப்போது திருமணம் என்றாலும் இப்பொழுதே பலர் இருவருக்கும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். வரும் காலத்தில் நயன்தாரா ஜோதிகாவை போல் தனது சொந்த தயாரிப்பில் மட்டும்தான் நடிப்பாராம்.