விஜய் 66 இப்படித்தான் இருக்கும்.. ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்றை வெளிப்படையாக பேசிய தயாரிப்பாளர்

தளபதி ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பீஸ்ட் திரைப்படம் ரிலீஸான பிறகு அதைத் தாறுமாறாக திரையரங்கில் கொண்டாடிய ரசிகர்களுக்கு, தற்போது அவருடைய அடுத்த பட அப்டேட் குறித்து அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்தவகையில் தளபதியின் 66-வது படத்தை குறித்த படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு ஓபன் டாக் கொடுத்திருக்கிறார். அதாவது தளபதியின் 66-வது திரைப்படத்தில் ஆக்ஷன், ரொமான்ஸ் போன்ற அனைத்தும் கண்டிப்பாக இருக்கும். அத்துடன் இந்தப்படம் குடும்ப கதையாக உருவாகியுள்ள எமோஷனல் நிறைந்த படமாக இருக்கப்போகிறது.

மேலும் இந்தப் படம் நிச்சயம் ஹார்ட் டச்சிங் படமாக இருக்கும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். மேலும் தளபதி 66 படத்தை தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கப் போகிறார்.

இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இவர்களுடன் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் லேசா லேசா படத்தின் கதாநாயகன் ஷ்யாம், விஜய்க்கு சகோதரனாகவும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தமன் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அத்துடன் சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடைபெறுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஆக்ஷன் காட்சிகளை இருக்காது என்பதுதான் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது.

ஏனென்றால் விஜய் படம் என்றால் அதில் ஆக்ஷன் காட்சிகள் தான் பெரிதும் பேசப்படும் அப்படியிருக்கையில் விஜய்க்கு ஓரளவு சென்டிமென்ட் மட்டுமே ஒத்துப்போகும். மேலும் தெலுங்கு இயக்குனர் இந்த படத்தை இயக்குவதால் தெலுங்கு வாடை அதிகம் விசு விடுமோ என்ற பயமும் தளபதி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.