விஜய் விரும்பிப் பார்க்கும் ஒரே டிவி நிகழ்ச்சி.. எங்கே போனாலும் டைமுக்கு ஆஜராகும் தளபதி

பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு தன்னுடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். தமிழ்-தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் சென்னையில் நடத்த ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

பிஸியாக நடித்து வந்தாலும் விஜய் எப்போதும் தனது குடும்பத்திற்கு என தனியாக நேரம் ஒதுக்கி குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். பெரும்பாலும் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சூட்டிங் இருந்தால் வீட்டில் இருப்பதையே அவர் பெரிதும் விரும்புகிறார். அவ்வப்போது படக்குழுவினருக்கும் கூட தன்னுடைய வீட்டில் விருந்தளித்து வருகிறார்.

சூட்டிங் இல்லாத நேரங்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது போலவே, வேலையின் போதும் சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுடன் தொடர்ப்பில் இருந்து கொண்டிருக்கிறார். நடிகர் விஜயின் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் தங்கி டைரக்க்ஷன் கோர்ஸ் படித்து வருகிறார். இவர் விஜய்யுடன் “போக்கிரி” மற்றும் “வேட்டைக்காரன்” படங்களில் ஒரு பாடல் காட்சியில் தந்தையுடன் தோன்றியுள்ளார்.

மகள் திவ்யா ஷாஷா அமெரிக்காவிலுள்ள பள்ளியில் தன்னுடைய பள்ளி படிப்பை படித்து வருகிறார். இவரும் விஜயுடன் “தெறி” படத்தில் கிளைமாக்ஸில் 15 நிமிடங்கள் நடித்திருந்தார் .எந்த பிஸியான நேரங்களிலும் தினம் ஒரு முறையாவது விஜய் இருவரிமும் போனில் அழைத்து பேசி விடுகிறார். எப்பொழுதும் தன் பிள்ளைகளின் முடிவில் தன் தலையிடுவதில்லை என்ற முடிவிலுள்ளார்.

அதே போல பிஸியாக சூட்டிங்கில் ஈடுபட்டிருந்தாலும் தளபதி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தவறாமல் கண்டுகளித்து விடுவாராம். தன்னுடைய டென்ஷனான வாழ்க்கை சூழ்நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தன்னை உற்சாகப்படுத்தி கொள்கிறாராம். அந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு எபிசொடும் அவருக்கு நன்றாக தெரியுமாம், அந்த அளவிற்கு அவர் அதனை விரும்பி பார்ப்பார் என அவருடைய நண்பர்களும் கூறுகின்றனர்.

பீஸ்ட் படம் சற்று சறுக்கலை சந்தித்ததால் தன்னுடைய அடுத்த பட வேலையில் மிக கவனமாக உள்ளார் அவர். படத்தை வம்சி படப்பள்ளி இயக்க, ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷ்யாம், பிரம்மானந்தம் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். முதல் முறையாக விஜய் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.