எச் வினோத் தற்போது அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் வலிமை படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் 2022 பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இதையடுத்து வினோத், நடிகர் விஜய் சேதுபதியிடம் ஒரு கதையை கூறியுள்ளார். இந்தக் கதை விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்து விட்டதால் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

ஏற்கனவே வினோத் வலிமை படத்துக்கு பிறகு அஜித்துடன் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனால் விஜய் சேதுபதி ஒப்புக் கொண்ட இந்த கதை தல அஜித்தின் அடுத்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தல அஜித் தனது அடுத்த படத்தில் நெகட்டிவ் கலந்த கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் அஜித்துடன் இணைந்து கலக்குவார் என்று தெரிகிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே ரஜினிகாந்த், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அந்த வரிசையில் தல அஜித்துடன் விஜய் சேதுபதி இணையும் இந்தப் படம் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைசாக இருக்கும். விஜய் சேதுபதி தற்போது பல படங்களில் நடித்து வருவதால், கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு வினோத் இயக்கும் இந்த படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.