விஜய் பட பூஜையில் கலந்து கொள்ளும் சூப்பர் ஸ்டார்.. முதலில் தளபதி66 கதையை சொன்னதே அவருக்குதானாம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி கொண்டிருக்கிறது. இப்படத்தை வருகிற பொங்கல் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதால் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே நடிகர் விஜய் அடுத்த படத்தின் மீது தன் கவனத்தை வைத்துள்ளார். அதாவது சில நாட்களுக்கு முன்பு தளபதி 66 படத்தை வம்சி படிபல்லி இயக்குவதாகவும், தில் ராஜூ தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

திடீரென தளபதி 66 படத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு காரணம் என்ன என பலரும் கேட்டு வந்தனர். அதற்கு சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களை எடுக்க வேண்டும் என்றால் கோடிக்கணக்கில் பணத்தை செலவிட வேண்டும். அதற்காக பைனான்சியர்களிடம் தேவையான பணத்தை பெற வேண்டும். ஆனால் அதிகாரப்பூர்வமாக படத்தின் அறிவிப்பு வெளியானால் தான் அவர்கள் பணத்தைக் கொடுப்பார்கள் என்பதற்காகவே திடீரென படத்தின் அறிவிப்பு வெளியானதாக கூறிவருகின்றனர்.

ஆனால் இப்படத்தின் கதையை முதலில் மகேஷ்பாபுவுடன் தான் வம்சி படிபல்லி கூறியுள்ளார். படத்தின் கதையை கேட்டுவிட்டு மகேஷ்பாபு தன்னைவிட இந்த கதாபாத்திரத்திற்கு விஜய் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என கூறியுள்ளார். அதன் பிறகுதான் வம்சி படிபல்லி விஜய்யிடம் கதையை பற்றி கூறி சம்மதம் வாங்கியுள்ளார்.

தற்போது இப்படத்தின் பட பூஜை இன்னும் ஒரு சில மாதங்களில் வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அதில் விஜய் மற்றும் மகேஷ் பாபு கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த இரண்டு சூப்பர் ஸ்டார்களும் ஒரே இடத்தில் கலந்து கொள்ள இருப்பதால் தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தளபதி விஜய் கூடிய விரைவில் தளபதி 66 படத்தின் அடுத்த அப்டேட் அதிகாரப்பூர்வ வெளியிடுவார் என கூறிவருகின்றனர்.