விஜய் பட நடிகையுடன் காதலில் விழுந்தாரா அனிருத்.? இரவில் நெருக்கமாக வெளிவந்த புகைப்படம்

தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். அவருடைய பாடல்களுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உண்டு. இவர் தனது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அவருக்கு மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் தன் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.  அத்துடன் அனிருத், மாளவிகா இருக்கும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் அனிருத், மாளவிகாவின் தோளில் கைபோட்டு மிகவும் நெருக்கமாக அமர்ந்து உள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அனிருத்தும், மாளவிகாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கின்றனர்.

கடந்த வருடம் அனிருத்தின் பிறந்தநாளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார். அதை பார்த்த ரசிகர்கள் அவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறி வந்தனர்.

அந்த வகையில் தற்போது மாளவிகாவை அனிருத்தின் காதலி ஆக்கிவிட்டனர். அந்தப் புகைப்படத்தில் மாளவிகா தன் கையை பின்னே மறைப்பது போல் வைத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அப்படி என்ன மறைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அனிருத்திற்கு இது ஒன்றும் புதிது அல்ல. இதே போன்று நடிகை ஆண்ட்ரியாவுடன் அவர் காதலில் இருப்பதாக சில வருடங்களுக்கு முன் கிசுகிசுக்கப்பட்டார். அந்த  வரிசையில் தற்போது மாளவிகா சிக்கியுள்ளார்.