பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் லண்டனை சேர்ந்த தொழிலதிபர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவரை போலீசார் கைது செய்தனர். ஏனெனில் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து, வலைதளம் வாயிலாக ஒரு சில முக்கிய செயலியில் பதிவேற்றியுள்ளார்.

இதுபோன்ற செயலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளதாக இவரை போலீசார் கைது செய்தனர். ராஜ் குந்த்ரா செய்த இந்த குற்றத்திற்கான அனைத்து ஆதாரமும் தங்களிடம் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆகையால், இவர் கையும் களவுமாக போலீசாரிடம் பிடிபட்டு உள்ளார்.

அதேசமயம் இதுபோன்ற ஆபாச படங்களில் பிரபல மாடல் அழகிகளை நடிக்க வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது ராஜ்குந்த்ரா ஜாமீன் பெற்று ஜெயிலில் இருந்து வெளியில் வந்துவிட்டார். ஆனாலும் இவர் மீது அடுக்கடுக்காக வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதில் ஒன்றாக, மாடல் அழகி ஷெர்லின், தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக காவல் நிலையத்தில் ராஜ்குந்த்ரா மீது புகார் அளித்துள்ளார். இந்த புகார் மனுவே நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது கொலை மிரட்டல் என்ற புது வழக்கினை ராஜ்குந்த்ரா மீது தொடுத்துள்ளார் நடிகை ஷெர்லின் சோப்ரா.

ஷெர்லின் சோப்ராவிடம் தவறாக முயற்சி செய்தல், ஆபாசமான புகைப்படங்களை காட்டி தொல்லை செய்தல் போன்ற பல்வேறு வழக்கினை ராஜ் குந்த்ரா மீது வரிசையாக பதிவு செய்து உள்ளார் நடிகை செர்லின் சோப்ரா. இவர் பதிவு செய்த வழக்கை வாபஸ் பெறக்கோரி பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் ஒன்றிணைந்து பிரபல தாதாக்களை தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஷெர்லின் சோப்ரா கூறுகிறார்.

அத்துடன் தற்போது தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தன்னை மனரீதியாக காயப்படுத்தி வருவதாகவும் ராஜ் குந்த்ரா மீதும் அவரது மனைவி ஷில்பா ஷெட்டி மீதும் வழக்கு தொடுத்துள்ளார் ஷெர்லின் சோப்ரா. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.