விஜய் படத்தின் சாயலில் உருவாகும் ஏகே 61.. சாந்தனு போல் நடிக்கப் போவது யார் தெரியுமா.?

தல அஜித்தின் ஏகே 61 திரைப்படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் படப்பிடிப்பு தொடங்கி உள்ள நிலையில் இந்த படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஏகே 61 திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பிற்கு பிறகு இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் அஜித் ரசிகர்கள் இத்திரைப்படத்தை கொண்டாடினர். நடிகர் அஜித்திற்கு பிடித்தமான பைக் ஸ்டண்ட் காட்சிகள் வலிமை திரைப்படத்தில் இடம்பெற்று பெருமளவில் பேசப்பட்டது.

இதனையடுத்து இயக்குனர் ஹெச்.வினோத் 3வது முறையாக ஏகே 61 திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் கை கோர்த்துள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு பேராசிரியர் கேரக்டராம். ஆன்ட்டி ஹீரோ கேரக்டரில் அதிகமாக நடிக்கும் அஜித் தற்போது காலேஜ் பேராசிரியராக நடிக்க ஆயத்தமாகி வருகிறார். ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தில் பேராசிரியர் கேரக்டரில் தளபதி விஜய் நடித்து அசத்தியிருப்பார்.

இந்நிலையில் தல அஜித்தையும் இந்த கேரக்டரில் பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். மேலும் இத்திரைப்படத்தில் வளர்ந்துவரும் இன்னொரு நடிகர் இடம்பெற்றுள்ளார். சீரியல்களில் தொடங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான நடிகர் கவின். இவர் தற்போது நடிகர் அஜித்துடன் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் இவர் மாணவன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். தற்போது பல திரைப்படங்களில் நடித்து வரும் கவின் ஹாரர் த்ரில்லர் திரைப்படமான லிப்ட் படத்தில நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது தல அஜித் கேரளாவில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டார்.

அப்போது வெளியிடப்பட்ட தல அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனிடையே ஏகே 61 திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏ.கே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவலும் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.