விஜய் படங்களையே மண்ணை கவ்வ செய்த 2 படங்கள்.. வசூல் இருந்தாலும் தரமா இல்ல

தளபதி விஜய் படம் ரிலீசாகிறது என்றாலே ரசிகர்கள் ஆரவாரத்துடன் இருப்பார்கள். மேலும் விஜய் படம் என்றாலே ஒரு பெரிய பயம் இருக்கும். ரஜினிக்கு அடுத்த வாரிசு விஜய் என்பதுபோல சினிமாவுலகில் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் படங்கள் வெளியாகும்போது மற்ற படங்களை வெளியிட பல நடிகர்களும் பயப்படுவார்கள்.

அவ்வாறு விஜய் படம் மொத்த வசூலையும் அள்ளி பிளாக்பஸ்டர் ஹிட்டாகும். ஆனால் விஜய் படம் வெளியாகும் போது ஒரு சில படங்கள் வெளியானதால் விஜய் படம் தோல்வியை சந்தித்துள்ளது. அவ்வாறு எந்த இரண்டு படங்களுடன் போட்டியிட்டு விஜய் படம் தோல்வியை சந்தித்தது என்பதை பார்க்கலாம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் ஃபுட்பாலை மையமாக வைத்து வெளியான திரைப்படம் பிகில். இப்படத்தில் அட்லியுடன் மூன்றாவது முறையாக விஜய் கூட்டணி அமைத்து இருந்தார். மேலும் பெண்களின் முன்னேற்றத்தை வலுவாக சொன்ன படம் இது. ஆனால் பிகில் படம் விஜய் ரசிகர்களை தாண்டி மற்ற ரசிகர்களை பெரிதும் கவரவில்லை.

அதற்கு முக்கிய காரணம் அப்போது வெளியான கைதி படம் தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி. இப்படத்தில் ஹீரோயின், பாடல் என எதுவுமே இடம்பெறவில்லை. ஒருநாள் இரவில் நடக்கும் சம்பவம் தான் படத்தின் மொத்த கதை. ஆனால் தன்னுடைய இயக்கத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தார் லோகேஷ்.

இதனால் தன்னுடைய அடுத்த படத்தில் விஜய், லோகேஷ் உடன் கைகோர்த்து இருந்தார். இவர்களது கூட்டணியில் உருவான மாஸ்டர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதற்கு அடுத்தபடியாக இந்த ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி விஜய்யின் பீஸ்ட் படம் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்தது.

முதல்நாள் ஓரளவு வசூலை பெற்ற பீஸ்ட் படம் மறுநாள் கே ஜி எஃப் 2 படத்தின் ரிலீஸ் ஆல் தடுமாறியது. மேலும், பீஸ்ட் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. ஆனால் வசூலில் நல்ல லாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது. இவ்வாறு இந்த இரண்டு படங்களின் ரிலீஸால் விஜய் படம் மண்ணை கவ்வியது.