விஜய் டிவி பிரியங்காவுக்கு விவாகரத்தா? கணவருடன் பிரச்சினையை புட்டு புட்டு வைத்த பிரபலம்

இன்றைய தேதிக்கு மற்ற சேனல்களில் பணியாற்றும் தொகுப்பாளர்களைவிட விஜய் டிவியில் பணியாற்றும் தொகுப்பாளர்களுக்கு பெயரும் புகழும் பணமும் அதிகமே. விஜய் டிவியில் பணியாற்றுபவர்களுக்கு வெளியிடங்களில் நல்ல மவுசு உள்ளது என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். அதில் மிக மிக முக்கியமானவர் தான் நம்ம பிரியங்கா.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது பரிசை வென்றார். இந்நிலையில் பிரியங்காவுக்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் அப்பட்டமாக தெரிவித்ததும் வைரலாகி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவி பிரியங்கா சமீப காலமாக தனது அம்மாவுடன் அதிக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுகிறார் தவிர அவருடைய கணவருடன் எந்தவிதமான புகைப்படங்களையும் வெளியிட்டதாக தெரியவில்லை. அதற்கான காரணம் என்ன என்பதை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

பயில்வான் ரங்கநாதன் கூறுகையில் பிரியங்காவுக்கும் அவரது கணவருக்கும் கடந்த சில மாதங்களாக சண்டை ஏற்பட்டு உள்ளதால் இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்கின்றனர் எனவும் அதனால் தான் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சிகே வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் விரைவில் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டு தனித்தனியே செல்லப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்து இவ்வளவு நாட்கள் ஆகியும் இன்னமும் அவரது கணவரை பிரியங்கா பார்க்கவில்லை என்பதை வைத்து பயில்வான் ரங்கநாதன் இந்த செய்தி வலம் வருவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்த திவ்யதர்ஷினி, ரம்யா போன்றோருக்கும் விவாகரத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பிரியங்காவுக்கு பெயரும் புகழும் அதிகமானதால் தலைக்கணம் அதிகமாகி விட்டதாகவும் கூறுகின்றனர் என அவர் அந்த வீடியோவில் தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் சமீப காலமாக பயில்வான் ரங்கநாதன் பேசும் கருத்துக்கள் சர்ச்சைகள் ஆகவே இருந்து வருகின்றன எனவும் இதில் உண்மை இருக்காது எனவும் ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பிரியங்காவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.