ப்ரைம் டைமிங்கில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்கள் பெரும்பாலும் அதிக ரசிகர்களை கவர்ந்திருக்கும். அந்த வகையில் கலர்ஸ் தமிழில் இதயத்தை திருடாதே சீரியல் வெற்றிகரமாக தனது இரண்டாவது சீசனில் சிறப்பாக ஓடி வருகின்றது. இந்த நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர்.

தற்போது பல திருப்புமுனைகளையும், சுவாரசியமான ரொமான்ஸ் காட்சிகளையும் கடந்து ஒளிபரப்பாகி வரக்கூடிய இதயத்தை திருடாதே நிகழ்ச்சியில், தற்போது விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியை சேர்ந்த ரியல் ஜோடி களமிறங்கியுள்ளது. இவர்களால் கலர்ஸ் தமிழே தற்போது களைகட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இதயத்தை திருடாதே சீரியலில் தற்போது நவராத்திரி கொண்டாட்டம் துவங்கியுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக சூப்பர் சிங்கர் சீசன் 6 இல் டைட்டிலை வென்ற செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி இருவரும் விருந்தினராக வருகை தந்துள்ளனர்.

இதயத்தை திருடாதே கதாநாயகன் நவின், கதாநாயகி பிந்து, மற்றும் செந்தில்-ராஜலட்சுமி ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வலைத்தளங்களில் பகிரப்பட்டு உள்ளது. இதனால் நெட்டிசன்கள் அனைவரும், ‘சபாஷ், சரியான ஜோடி. இவர்களும் சீரியலுக்கு வந்துட்டாங்களா’ என்று வியப்புடன் கேட்டு வருகின்றனர்.

இந்த புகைப்படம் வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதயத்தை திருடாதே ரசிகர்கள் மத்தியில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களிசை பாடல்களை பாடி, திரைப்படங்களில் இணைந்து பாடல்களை பாடி வரும் ரியல் தம்பதியான செந்தில்-ராஜலட்சுமி இவர்களின் வருகைக்கு சின்னத்திரையை சேர்ந்த அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நவராத்திரி கொண்டாட்டத்தில் இந்த தம்பதியரின் இன்னிசை பாடல்கள் இனிமையாக ஒலிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இனி இதயத்தை திருடாதே நிகழ்ச்சிக்கு டிஆர்பி ரேட்டிங் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.