உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கக்கூடிய பிக் பாஸ் சீசன்5 கடந்த அக்டோபர் 3ஆம் தேதி அன்று, இந்நிகழ்ச்சியின் முதல் எபிசோடை விஜய் டிவி ஒளிபரப்பு செய்தது. அதே சமயத்தில் சன் டிவியில் நடிகர் விஜய், நடிகை நயன்தாரா இணைந்து நடித்த நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பிகில் ஒளிபரப்பப்பட்டது.

அதுவும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட அதேசமயத்தில் தளபதி விஜயின் ‘பிகில்’ திரைப்படமும் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அதனால் விஜய் ரசிகர்களுக்கும், பிக்பாஸ் ரசிகர்களுக்கும் எந்த டிவி பார்ப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதே சமயத்தில் நெட்டிசன்கள் இவ்விரு நிகழ்ச்சிகளில் எது டிஆர்பியில் முதலிடம் பிடிக்கும் என்பதை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தற்போது தான் அந்த கேள்விக்கான விடை கிடைத்திருக்கிறது.

அதில் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட இளையதளபதி விஜயின் பிகில் திரைப்படமே 13.71 புள்ளிகளை பெற்று முதலிடத்திலும், உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன்5  நிகழ்ச்சியானது 8.60புள்ளிகளைப் பெற்று இருக்கிறது என்பதை வெளியிட்டனர்.

இந்தச் செய்தியினை தளபதி விஜயின் ரசிகர்கள் பயங்கரமாக கொண்டாடி வருகின்றனர். பல மீம்களை உருவாக்கி, அதை வெகுவாக மக்களிடையே பகிர்ந்து வருகின்றனர். அது தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் இளைய தளபதி விஜய்னா சும்மாவா? என்றும் சமூக வலைதளங்களில் தளபதி விஜய்யின் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர்.