கடந்த வாரத்திலிருந்து சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் புதிய நெடுந்தொடர் கயல். இந்த சீரியல் ரோஜா போன்ற சன் டிவியின் டாப் சீரியல்களை பின்னுக்குத்தள்ளி டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தையும், மக்களின் ஆதரவையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த கயல் சீரியலில் மக்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான இரு முகங்கள் கதாநாயகன் நாயகியாக நடிப்பது சீரியலின் இந்த வெற்றிக்கு ஒரு காரணமாகும். விஜய் டிவியின் ‘ராஜா ராணி’சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் சஞ்சீவ்.இவர் இந்த சீரியலில் உடன் நடித்த நடிகை ஆலியா மானசாவை காதலித்து திருமணம் செய்தார்.

மேலும் இந்த சீரியல் இவருக்கு ஒரு சூப்பர்ஹிட் வெற்றியை கொடுத்த சீரியல். இதனை தொடர்ந்து இவர் ‘காற்றின் மொழி’ என்னும் மற்றொரு சூப்பர் ஹிட் சீரியலிலும் லீட் ரோலில் நடித்தார். இந்த சீரியலும் நன்றாக முடிவடைந்த பிறகு தற்போது இவர் சன் டிவி சீரியலில் கதாநாயகனாக நடித்து மக்களை கவர்ந்த நாயகனாக திகழ்கிறார்.

அதைத்தொடர்ந்து கயல் சீரியலின் கதாநாயகியாக நடிகை சைத்ரா நடித்து வருகிறார். இவர் முதன்முதலில் விஜய் டிவியில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

பின் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி என்னும் சூப்பர்ஹிட் சீரியலில் ஸ்வேதா என்னும் நெகட்டிவ் ரோலில் கலக்கி மக்களிடம் தன் அடையாளத்தை பதித்துக் கொண்டார். இப்படி ஒரு வெற்றிக் கூட்டணியில் உருவான இந்த கயல் சீரியல் ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே மக்களிடம் செம்ம ரீச்.

எனவே நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்த சீரியல் தன் இடத்தை தக்க வைத்து, மேலும் மக்களின் ஆதரவை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் விறுவிறுப்பாகவும் வெற்றிகரமாகவும் செல்லும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.