பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளராக இருப்பவர் தொகுப்பாளினி பிரியங்கா. அவர் வீட்டுக்கு வந்த நாள் முதல் அனைவரையும் கலாய்த்து வருகிறார். அதில் ஒரு படி மேலே போய் பிக்பாஸயே நைட்டியை திருடி விட்டீர்கள் பெருசு என்று கலாய்த்தார்.

அந்த வாரம் முழுவதும் அவர் கொஞ்சம் தெனாவட்டாக பிக்பாஸிடம் நடந்து கொண்டார். இதைப் பார்த்த பலரும் முகம் சுளித்தனர். இதனால் பிக்பாஸ் டீம் அவரை கூப்பிட்டு எச்சரிக்கை செய்ததாக தெரிகிறது.

பிரியங்கா நான் காமெடிக்காக இதை செய்தேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு பிக்பாஸ் பெருசு என்ற வார்த்தை மரியாதைக்குரியது அல்ல என்று அழுத்தமாகக் கூறியுள்ளார். இனி இதுபோல் நடக்கக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

இதன் காரணமாகவே பிரியங்கா அதற்கு அடுத்த வாரங்களில் கொஞ்சம் அடக்கி வாசித்து உள்ளார். வார இறுதியில் கமல் இது பற்றி விசாரிக்கும் பொழுது கூட  எதையோ சொல்லி சமாளித்தார்.

பிரியங்கா விஜய் டிவியின் மூலம் நம் அனைவருக்கும் தெரிந்த முகம். அதனாலே அவர் கூடுதல் அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் தன்னை அவ்வளவு சீக்கிரம் வெளியேற்ற முடியாது என்ற தலைக்கனமும் அவருக்கு உள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர்.