விஜய் டிவியில் வார இறுதிநாள் என்றாலே மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி தான். ஏனெனில் மக்களுக்கு பிடித்தமான, மக்களை குஷிப்படுத்தும் விதமாக பல ரியாலிட்டி ஷோக்களை மக்களுக்கு விருந்தாக்குகின்றனர். அந்த விதமாக இந்த வாரம் ஞாயிறு மதியம் 3 மணிக்கு ‘சவுண்ட் பார்ட்டி’ என்ற கேம் ஷோவை ஒளிபரப்பி ரசிகர்களை மேலும் குஷிப்படுத்த போகின்றனர்.

இந்த நிகழ்ச்சியை மக்களின் தொகுப்பாளர் என்று செல்லமாக அழைக்கப்படும் மாகாபா ஆனந்த் அவர்கள் தொகுத்து வழங்கப் போகிறார். மேலும் இதில் ஆண்கள் அணி பெண்கள் அணி என இரண்டு அணிகளாகப் பிரிந்து மோதிக்கொள்ள போகின்றனர். ஆண்கள் அணியின் தலைவராக மதுரை முத்தும் பெண்கள் அணியின் தலைவராக கிரேஸ் அக்காவும் இருந்து கலக்கப் போகிறார்கள்.

இதில் எந்த அணி வெற்றி பெறும் என்று ஆர்வத்தை தூண்டி ஒரு தரமான போட்டியாக இருக்கும் என மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதற்கான ப்ரோமோகளை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. மேலும் இதில் ஒரு சிறப்பான சம்பவமாக மாகாபாவின் பத்தாண்டு விஜய் டிவியின் பயணத்தைப் பற்றி எடுத்துரைத்து அவருக்கு பல சர்ச்சைகளை தர காத்துள்ளனர் விஜய் டிவி டீம்.

மேலும் மாகாபா ஆனந்த் விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடர்ந்தார். இதற்கு முன் ரேடியோ ஜாக்கியாக இருந்து வந்தார். விஜய் டிவியில் காலடி எடுத்து வைத்து நம்பர் ஒன் தொகுப்பாளராக பத்தாண்டுகள் கடந்து தற்போது வரை இந்த இடத்தை விட்டுக் கொடுக்காமல் தக்க வைத்து வருகிறார். மேலும் இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த போதே வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைத்த சில திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தற்பொழுது இவர் விஜய் டிவியில் 10 ஆண்டுகளாக பயணித்து வருவதற்கு அவருக்கு பாராட்டுக்களை வழங்கி சிறப்பித்தனர். மேலும் ஒரு பெரிய சர்ப்ரைசாக மகாபாவின் மனைவி சூசன் அவர்களை வரவழைத்து அவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தனர். இது பற்றிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் மாகாபாவிற்கு நெகிழ்வுடன் பாராட்டுகளை தெரிவித்து மேலும் அவரின் மனைவியிடம் அவரை பற்றி பல கேள்விகளை எழுப்பினார் தொகுப்பாளர் தீபக்.

அதில் மாகாபா பற்றி யாருக்கும் தெரியாத விஷயத்தை சொல்லுங்க என்றதும் சற்றும் யோசிக்காமல் தப்பே செய்யவில்லை என்றாலும் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு முந்திக் கொள்வார் என அவரைப் பற்றி பல விஷயத்தை புட்டு புட்டு வைத்தார் அவரின் மனைவி சூசன். இவ்வாறு மாறி மாறி மகாபா மற்றும் சூசன் தங்கள் அன்பை பகிர்ந்து, தங்களது வாழ்க்கையின் பல விஷயங்களையும் மக்கள் மத்தியில் பகிர்ந்து ஆச்சரியத்தையும் சுவாரசியத்தையும் ஏற்படுத்தினர்.