விஜய் டிவியிலிருந்து விரட்டப்பட்ட சீரியல் நடிகை.. ஜீ தமிழில் தஞ்சம்!

விஜய் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் முதல் பாகத்தில் கதாநாயகி தான் நடிகை ரக்ஷா. இவர் இந்த சீரியலில் மாயன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர்களது ஜோடி, நாம் இருவர் நமக்கு இருவர்த சீரியலில் சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி போலவும் இருக்கிறது என இவர்களது ரசிகர்கள் வர்ணித்ததுண்டு. இந்த நிலையில்தான் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட போது, வெளிமாநிலத்தில் சிக்கிக்கொண்ட ரக்ஷா மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியபோது அவரால் குறித்த நேரத்திற்கு வரமுடியவில்லை.

இதனால் ரக்ஷா அந்த சீரியலில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்கு பதில் வேறு நடிகையை மாற்றினார்கள். அதன் பிறகு இப்போது நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாவது பாகம் வெற்றிகரமாகவும், விறுவிறுப்பாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நடிகை ரக்ஷா தற்போது புதிய கதாபாத்திரத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘அன்பே சிவம்’என்ற சீரியலில் நடிக்க உள்ளார். இவர் மீண்டும் சின்னத்திரை உலகிற்குள் வருவது இவருடைய ரசிகர்களிடையே பேரின்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ரக் ஏற்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘நாச்சியார்புரம்’ என்ற சீரியலில் நடித்துள்ளார். அதுவும் இந்த சீரியலில் நடிகை ரக்ஷா தனது கணவருடன் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய் டிவியிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் சீரியலில் இருந்து விலகிய ரக்ஷா தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பப்படும் சீரியல் நடிக்கப்போவது விஜய் டிவியின் மீது உள்ள கோபமா? என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.