விஜய் டிவியில் எப்பொழுதும் என்டர்டைன்மென்ட்டுக்கு பஞ்சமே இல்லாமல் மக்களை திருப்தி படுத்தி வருகின்றனர். அந்த விதமாக என்டர்டைன்மென்ட் இன் அடுத்த அத்தியாயமாக புதிதாக ஒளிபரப்பாக போகிற புத்தம் புதிய கேம் ஷோ தான் சூப்பர் டாடி. இந்த நிகழ்ச்சி நவம்பர் 21 முதல் ஞாயிறு தோறும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக போகிறது. இதனை ஈரோடு மகேஷ் தொகுத்து வழங்கப் போகிறார். மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சி தந்தை மற்றும் குழந்தைகள் இணைந்து குதுகலமாய் விளையாடும் நிகழ்ச்சி ஆகும். இதில் பல முக்கிய பிரபலங்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு லூட்டி அடிக்க போவது தெளிவாக தெரிகிறது. இதில் பல காமெடி ஷோக்களில் கலக்கி தற்பொழுது மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை போட்டியாளராக இருப்பவர் வினோத். இவர் தனது மகள் த்ரிஷிகாவுடன் இணைந்து விளையாட போகிறார்.

அதேபோல் பல காமெடி ஷோவில் காமெடியனாகவும், நடுவர்களாகவும் கலக்கியவர் மதுரைமுத்து. இவர் தனது மகள் யாழினி உடன் போட்டியில் களம் இறங்கப் போகிறார். இவர்களைத் தொடர்ந்து சீரியல் நடிகர் வெங்கட், தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். இவரும் தன் மகள் தேஜஸ்வினி உடன் இணைந்து இந்த புதிய ஷோவில் மேலும் கலக்கப் போகிறார்.

அதேபோல் பல திரைப்படங்களில் காமெடி ஆக்டர் ஆக இருந்தவர் கிங்காங். இவர் பெரும்பாலும் வைகைப்புயல் வடிவேலு உடன் இணைந்து பல திரைப்படங்களில் அசத்தியிருப்பார். தற்போது சூப்பர் டாடி நிகழ்ச்சியில் தன் மகன் துரைமுருகன் உடன் சேர்ந்து அசத்தப் போகிறார்.

இதை அடுத்து மற்றொரு காமெடி ஆக்டராக பல திரைப்படங்களில் கலக்கி வந்தவர் கொட்டாச்சி. கொட்டாச்சியின் மகள் மானஸ்வி தனது தந்தையைப் போல் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரம். இவர் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்து அசத்தியிருப்பார். தற்போது இந்த நிகழ்ச்சியில் தந்தை மகள் இருவரும் சேர்ந்து அருமையாக கலக்கப் போகிறார்கள்.

மேலும் பாடகரான வேல்முருகன் தன் மகள் ரக்ஷனா உடன் இணைந்து விளையாடப் போகிறார். அதேபோல் பல காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கிய ராமர் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இணைந்து அற்புதமாக விளையாடப் போகிறார். இவ்வாறு இந்த ஷோவில் இனி காமெடிக்கு பஞ்சம் இருக்காது என தெள்ளத்தெளிவாக தெரிகிறது.