விஜய் டிவியில் வார இறுதி நாட்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல் மக்களை குதூகலப்படுத்தி வந்தனர். இந்நிலையில் விஜய் டிவியில் மேலும் ஒரு புதிய ரியாலிட்டி ஷோவை ஒளிபரப்பி மக்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடிக்க காத்துள்ளனர். அந்த விதமாக கடந்த சில வாரங்களாக ஸ்டார்ட் மியூசிக் சீசன் 3 தொடங்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை தொகுப்பாளர் மாகாபா தொகுத்து வழங்கி வருகிறார். இவ்வாறு பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் முடிவடைய முடிவடைய தொடர்ந்து பல புதிய ஷோக்களை களமிறக்கி மக்களை என்டர்டைன் செய்துகொண்டிருக்கின்றன.

கடந்த வாரம் மக்களை சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கடித்த வந்த ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ ஷோ முடிவடைந்தது. இதில் சுனிதா மற்றும் டிஎஸ்கே டைட்டில் வின்னர் ஆனார்கள். பாலா மற்றும் ரித்திகா ரன்னர் அப் ஆனார்கள். இதனைத்தொடர்ந்து மற்றுமொரு சூப்பர் ஹிட் ஷோவான ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3’ யும் இறுதிக்கட்ட போட்டியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுவும் விரைவில் முடிவடைய காத்துள்ளது.

இதனால் அதிருப்தியில் இருந்த மக்களை குஷிப்படுத்த ‘சூப்பர் டேட்’ என்னும் புதிய கேம் ஷோவை ஒளிபரப்பத் தயாராகி வருகின்றனர். ஏற்கனவே ஜீ தமிழில் ‘சூப்பர் மாம்’ என்னும் கேம்ஷோ பல சீசன்களாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. தற்போது அதைப் போலவே சூப்பர் டேட் என்னும் ஒரு புதிய கேம் ஷோ ஒளிபரப்பாகி மக்களை கவரும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது தந்தை மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு விளையாடும் ஒரு போட்டியாக அமைய உள்ளது. இந்த கேம் ஷோவில் அப்பாவிற்கும் பிள்ளைக்கும் இடையேயான பாசப் பிணைப்பையும் அந்த புரிதலையும் வெளிப்படுத்தும் ஒரு வித்தியாசமான புதிய கேம் ஷோவாக அமையப்போகிறது.

இந்த கேம் ஷோவில் சின்னத்திரை பிரபலங்களும் அவர்களின் குழந்தைகளும் கலந்துகொண்டு அசத்த போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த புதிய நிகழ்ச்சி ஞாயிறு தோறும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த போட்டியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார் யார் என்பது பற்றிய தகவல்கள் வெளிவராத நிலையில் இதனை தெரிந்து கொள்ள மக்கள் மிகுந்த ஆர்வமுடனும் எதிர்பார்ப்புடனும் உள்ளனர்.