விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே.. ஆரம்பிச்சு கொஞ்ச தானே ஆச்சு!

அதிக அளவிலான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தனக்கென தனி ட்ராக்கில் டிராவல் செய்து வருகிறது விஜய் டிவி. இந்த டிவியில் ஒளிபரப்பாகக் கூடிய பல நிகழ்ச்சிகள், அனைத்து வயதினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வகையில் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சி விஜய் டிவியின் சிறப்பாக ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரையை சேர்ந்த முக்கிய நட்சத்திரங்களும், வெவ்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நட்சத்திரங்களும், இந்த காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் கலக்கலாக பங்கு பெற்று, தங்களின் திறமைகளை செம தூளாக வெளிக் காட்டி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சி சார்ந்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. புதிதாக வெளியான அந்த புகைப்படத்தில், காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பைனல்ஸ் ரவுண்டு நடப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இந்த காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சி தொடங்கி சில காலம் மட்டுமே ஓடி வந்த நிலையில், அதற்குள் பைனல் ரவுண்டு வந்துவிட்டதா? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய் டிவியில் ஹிட் நிகழ்ச்சியில் ஒன்றாக இடம் பிடித்துள்ள காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சி விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

அதே சமயம் ஓடிக் கொண்டிருக்க கூடிய காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அடுத்ததாக வெவ்வேறு பிரபலங்களை கொண்டு குக் வித் கோமாளியின் அடுத்த சீசனை தொடங்க இக்குழுவினர் திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது. வித்தியாச வித்தியாசமான நிகழ்ச்சியை உருவாக்கி ஒளிபரப்புவதில் விஜய் டிவியே முதலிடம்.

ஆகையால் இந்த காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சிக்கு பதிலாக வேறு நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடிவு செய்திருக்கலாம் என்று நெட்டிசன்கள் தரப்பில் கருத்துகள் பதிவாகி வருகிறது. ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி விரைவில் முடிவடைய இருப்பதாக வந்த தகவலையடுத்து ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளது.

மதுபான விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய நிதி அக்ர்வால்! அதுவும் நம்ம ஊரு பிராண்டு

தமிழ் சினிமாவில் சிம்புவுடன் ஈஸ்வரன், ஜெயம் ரவியுடன் பூமி ஆகிய இரண்டு படங்களில் நடித்து பிரபலமானவர் நிதி அகர்வால். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும் ...