திரையுலகில் மிகவும் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பிற்காக பெங்களூரு விமான நிலையம் சென்ற நடிகர் விஜய் சேதுபதி மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்திய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் விமான நிலையத்தில் சென்று கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதியை பின்னால் இருந்து வந்த நபர் ஒருவர் ஆவேசமாக எட்டி உதைக்கிறார். இதில் நிலைகுலைந்த விஜய் சேதுபதி தடுமாறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த திடீர் தாக்குதலை விஜய் சேதுபதி சற்றும் எதிர்பார்க்கவில்லை.

தாக்குதலை அடுத்து பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் விஜய் சேதுபதியை மீட்டனர். அந்த நபர் எதற்காக தாக்கினார் என்பதற்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும் விஜய் சேதுபதி ஒரு தமிழ் நடிகர் என்பதால் தாக்கப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு விமான நிலையம்

இந்த சம்பவம் குறித்து நடிகர் விஜய் சேதுபதியிடம் விசாரித்தபோது, எதுவும் பேச விரும்பவில்லை என கூறி விட்டாராம். விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்திய மர்ம நபரை விமான நிலைய தொழில் பாதுகாப்புப் படையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விஜய்சேதுபதி தமிழர் என்பதால் தாக்கப்பட்டாரா அல்லது தமிழினத்திற்கு எதிராக சில விஷயங்களை செய்ததால் தாக்கப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதியை தாக்கிய நபர் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பிரபல நடிகர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதவிர இந்த வீடியோ சோசியல் மீடியா முழுவதும் வெளியாகி உள்ளதால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். தாக்கப்பட்ட காரணம் என்ன என்பதே தெரியாமல் இருப்பது தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க கூடாது என்பதுதான் பலரின் வருத்தமாக உள்ளது.