விஜய் சேதுபதியை வேண்டாம் என ஒதுக்கிய ஷங்கர்.. பல வருடங்களுக்கு பின் வெளிவந்த உண்மை

இன்று சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இன்று ஏராளமான ரசிகர்களை பெற்று பெரும் புகழுடன் இருக்கும் அவர் ஆரம்ப காலத்தில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார்.

இவர் ஆரம்பத்தில் சினிமா வாய்ப்புகளை தேடி கோடம்பாக்கத்தில் சுற்றாத இடமே கிடையாது. அந்த அளவுக்கு மிகவும் கஷ்டப்பட்டு சிறிது சிறிதாக முன்னேறி அவர் இன்று ஒரு நடிகராக உயர்ந்துள்ளார். மேலும் ஹீரோ வாய்ப்பு ஒன்றும் அவருக்கு சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை.

பல திரைப்படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்து அதன் பிறகுதான் அவர் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார். அப்படி ஒருமுறை அவர் வாய்ப்பு தேடிக்கொண்டு இருக்கும்போது ஷங்கரின் படத்தில் 5 புதுமுக நடிகர்கள் தேவை என்ற செய்தியை கேள்வி பட்டு தன் போட்டோவை அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆனால் அவரின் போதாத காலம் ஷங்கர், விஜய் சேதுபதியை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யவில்லை. வேறு சில புதுமுக நடிகர்களை வைத்து ஷங்கர் இயக்கிய அந்த திரைப்படம் தான் பாய்ஸ். அந்தப் படத்தில் அறிமுகமான சித்தார்த், நகுல் ஆகியோர் இன்று சினிமாவில் ஒரு நல்ல இடத்தில் இருக்கின்றனர்.

அந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைக்காமல் போனாலும் தன்னுடைய விடாமுயற்சியால் அவர் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு அவருக்கு சினிமாவில் கிடைத்தது எல்லாமே வெற்றிதான்.

ஆரம்பத்தில் இவரை வேண்டாம் என ஒதுக்கிய பல இயக்குனர்களும் இன்று அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் விஜய் சேதுபதியின் இந்த அசுர வளர்ச்சி அவரின் முயற்சிக்கும், உழைப்புக்கும் கிடைத்த வெற்றி.

தற்போது ஷங்கர் விஜய் சேதுபதியை பாய்ஸ் திரைப்படத்தில் வேண்டாம் என ஒதுக்கிய இந்த விஷயத்தை நடிகர் மணிகண்டன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இவர் பாய்ஸ் திரைப்படத்தில் 5 நடிகர்களில் ஒருவராக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.