விஜய் சேதுபதியின் மார்க்கெட்டைப் பிடிக்க வரும் பிரபல வில்லன்.. கைவசம் இத்தனை படங்களா?

ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு அடையாளம் இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர் என்றாலே அது நடிகர் பிரகாஷ்ராஜ் தான். அதற்கு காரணம் இவரது மிரட்டலான நடிப்பு மட்டுமே. கில்லி படத்தில் முத்துப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரகாஷ் ராஜின் நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றது. அதன் பின்னரே இவர் மேலும் பிரபலமானார்.

வில்லன் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் இவர் நடிப்பில் அசத்தி இருப்பார். பிரகாஷ் ராஜ் ஒரு பன்முக திறமை கொண்ட நடிகர் என்றால் அது மிகையாகாது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் பிரகாஷ் ராஜ் தற்போது தமிழில் மட்டும் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அந்த வகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து விக்ரம், ஜெயம் ரவி மற்றும் கார்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார்.

இதுமட்டுமல்ல சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் ஆகிய படங்களிலும் பிரகாஷ் ராஜ் தான் மெயின் கேரக்டர். கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு எத்தனை படங்கள் என வாயை பிளக்கும் நேரத்தில் மற்றும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

அது வேறு யாருமல்ல நம்ம தளபதி விஜய் படம் தான். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 66 படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். ஏற்கனவே இவர்கள் இருவர் கூட்டணியில் வெளியான கில்லி படம் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது குறிப்பிடத்தக்கது.