விஜய் சேதுபதியின் தொடர் தோல்விக்கான காரணம் இதுதானாம்.. தவளை தன் வாயால் கெட்ட கதை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். முதலில் படங்களில் கதையை கேட்டு நடித்த நடிகர்களை விட தற்போது சம்பளத்தை கேட்டு நடிக்கும் நடிகர்கள் தான் அதிகமாகி விட்டனர். அந்த அளவிற்கு தற்போது கதையை விட சம்பளத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகின்றனர்.

சினிமா பொறுத்தவரை கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி சம்பாதித்துக் கொள்வது புத்திசாலித்தனம் தான் ஆனால் சம்பளத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது என்பதற்கு பல நடிகர்கள் உதாரணமாக இருந்துள்ளனர். ஆனால் சமீபகாலமாக பல நடிகர்களும் இதே தவறைத்தான் செய்து வருகின்றனர்.

முன்னணி நடிகராக இருக்கும் திரும்பிய பக்கமெல்லாம் அவரது படங்கள்தான் ஒளிபரப்பு செய்து வருகின்றனர். தொலைக்காட்சிக்கு சென்றாலும் அவரது படம்தான் ஒளிபரப்பப்படுகிறது, OTT சென்றாலும் அவரது படம்தான் இருக்கிறது. தியேட்டருக்கு சென்றாலும் விஜய் சேதுபதி படம்தான் ஒளிபரப்பப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் அமைதியாக இருந்த விஜய் சேதுபதி சமீபகாலமாக தனக்கு அதிகமான மார்க்கெட் இருப்பதால் தற்போது மெத்தனமாக பலரையும் விமர்சிப்பது என தனது உண்மை முகத்தை காட்டி வருகிறார். இதனால் தற்போது விஜய் சேதுபதி மீது இருந்த மதிப்பும் மரியாதையும் குறைந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் பலரும் தற்போது விஜய் சேதுபதி மீது பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். முதலில் கதையை தேர்வு செய்து நடித்த விஜய் சேதுபதி. தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சம்பளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். அதனால் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 3 படங்களுமே தோல்வியைத் சந்தித்துள்ளன. இதனால் தயாரிப்பாளர்கள் பலரும் கடும் கோபத்தில் உள்ளனர் என பலரும் கூறி வருகின்றனர்.

இவர் இல்லனா அசுரன் படமே இல்லை.. விருது மறுக்கப்பட்டதால் கொந்தளித்த ரசிகர்கள்

67வது தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்ட பல தமிழ் நடிகர்கள் தேசிய விருதை பெற்று சென்றனர். மேலும் இதே மேடையில் ...
AllEscort