வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது பல படங்கள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றுதான் சூர்யா நடித்துவரும் வாடிவாசல் திரைப்படம். இப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் சூர்யா வெற்றிமாறன் இருவரும் இணைந்துள்ளதால் வாடிவாசல் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என சினிமா பிரபலங்கள் பலரும் கூறி வந்த நிலையில். தற்போது இப்படம் உருவாவதற்கு கால தாமதமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது வெற்றிமாறன் தற்போது சூரி வைத்து விடுதலை எனும் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகனாக சூரி முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார். ஆனால் தற்போது விஜய் சேதுபதி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதால் இப்படத்தில் நடிக்க முடியாமல் காலதாமதம் ஆகியுள்ளது.

வெற்றிமாறனின் விடுதலை படத்தை முடித்த பிறகே வாடிவாசல் படத்தை இயக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளார். இதனால் தற்போது விஜய் சேதுபதியிடம் சீக்கிரமாக படத்தை நடித்துக் கொடுக்கும் படி கேட்டுள்ளார். இருப்பினும் விஜய் சேதுபதியால் தொடர்ந்து நடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதனால் வெற்றிமாறன் விடுதலை படத்தையும் முடிக்க முடியாமல், வாடிவாசல் படத்தையும் இயக்க முடியாமல் தவித்து வருகிறார். மேலும் வாடிவாசல் படத்தை இயக்க தொடங்கிவிட்டால் விடுதலை படத்தின் மீதான கவனம் குறைந்து விடும், இதனால் இரண்டு படங்களுமே பாதியில் நின்று விடும் என்பதற்காக தற்போது வெற்றிமாறன் விடுதலை படம் முடிந்த பிறகுதான் வாடிவாசல் படத்தை இயக்குவேன் என தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார்.

இதனால் தற்போது சூர்யாவும் சிக்கலில் உள்ளார். வெற்றிமாறன் படத்தில் பிறகு அடுத்தது பாலா படத்தில் நடிப்பதாக சூர்யா முடிவெடுத்துள்ளார்.இதனால் வெற்றிமாறன் வருவதற்கு முன்பு பாலா படத்தில் நடிக்கலாமா இல்லை பொறுத்திருந்து வாடிவாசல் படத்தை முடித்து கொடுக்கலாமா என்பதை சூர்யா யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.