தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி நடிகர் விஜய். அனைத்து இயக்குனர்களுடனும் கூட்டணி அமைத்து பல படங்கள் நடித்துள்ளார். ஆனால் இன்றுவரை ஒருசில சூப்பர் ஹிட் இயக்குனர்களுடன் சேராததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

நடிகர் விஜய்யை பொருத்தவரை கதைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அதேபோல் அந்தந்த காலகட்டத்தில் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர்களுடனும் கூட்டணி அமைத்து பல படங்கள் நடித்துள்ளார். ஆனால் இன்றுவரை ஒரு சில சூப்பர் ஹிட் இயக்குனருடன் கைகோர்க்கததை பற்றி சுந்தர் சி வெளிப்படையாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளவர் சுந்தர்சி. இவர் ரஜினியை வைத்து அருணாச்சலம் படத்தை இயக்கினார். இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு சுந்தர் சி அடுத்தடுத்து பல கதாநாயகர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

சுந்தர் சி பொருத்தவரை எப்போதுமே படத்தின் கதையை தெளிவாக கூற முடியாது. அதனால் படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போதுதான் அடுத்தடுத்த காட்சிகளை உருவாக்குவேன் என கூறியுள்ளார். ஆனால் விஜய் ஒரு படத்தில் நடிப்பதற்கு முன்பு படத்தின் கதையை முழுமையாக அறிந்த பிறகுதான் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்.

அதனால்தான் விஜய் தன்னுடைய படத்தில் நடிக்கவில்லை என கூறியுள்ளார். சுந்தர் சி கதை ஒன்றை விஜய்யிடம் கூறியதாகவும் அதற்கு விஜய் முழுக்கதையும் கூற சொன்னதாகவும் தன்னால் முழுக்கதையும் கூற முடியாததால் தான் தற்போது வரை இருவரும் இணைந்து படத்தில் பணியாற்ற முடியவில்லை என கூறியுள்ளார்.