விஜய்யை பற்றி பேசிய யாஷ்.. இத நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல்ல

கன்னட நடிகர் யாஷின் நடிப்பில் உருவான கேஜிஎப் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இதனிடையே வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், கே ஜி எஃப் 2, பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் யாஷ் விஜய்யை பற்றி பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.

கே ஜி எஃப் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் யாஷ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தை பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் பீஸ்ட், கேஜிஎஃப் 2 இந்த இரண்டு படமும் பார்க்க வேண்டும் இது ஒன்றும் அரசியல் அல்ல, எல்லோரும் எல்லா படங்களையும் பார்க்கலாம் என்று தெரிவித்தார். மேலும் நானும் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை பார்க்க ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றும் தளபதி விஜய் மிகப்பெரிய நடிகர் என்றும் யாஷ் புகழ்ந்தார்.

மேலும் கேஜிஎப் 2 திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் மட்டுமில்லாமல், கன்னட மொழி படத்தை தரத்தை மேம்படுத்தும் படமாகவும் இத்திரைப்படம் அமையும் என்று தெரிவித்தார் கன்னடத்தில் தான் நடித்த மற்ற திரைப்படங்களை காட்டிலும் கேஜிஎப் திரைப்படம் எனக்கு முக்கியமான திரைப்படம் என்றும் கே ஜி எஃப் 2 மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் விஜயை பற்றி பேசிய யாஷ், நானும் விஜய் சாருடைய ஃபேன் தான் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவரின் படத்தோடு கே ஜி எப் 2 மோதும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. கேஜிஎஃப் 2 மிகப்பெரிய ஹிட் கொடுக்கணும் அதேபோல பீஸ்ட் படமும் ஹிட் கொடுக்கணும். இரண்டும் ஒரே அளவில் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர வேண்டும் என்றும் இதுதான் என்னுடைய ஆசையாக உள்ளது என நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார். பீஸ்ட் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தால் எனக்கும் சந்தோஷம்தான். அதேபோல கேஜிஎப் 2 திரைப்படமும் நல்ல வெற்றியை கொடுக்கும் என்று நடிகர் யாஷ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தில் சமீபத்தில் ட்ரெய்லர் வெளியான நிலையில் பல விமர்சனங்களை பெற்று நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல கேஜிஎப் 2 திரைப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பேன் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள கேஜிஎப் 2 திரைப்படம் தமிழ் கன்னடம் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஆனால் விஜயின் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மட்டுமே எடுக்கப்பட்டு ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பீஸ்ட் படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த இரண்டு திரைப்படங்களையும் திரையரங்குகளில் காண ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இன்னும் சில நாட்களே இத்திரைப்படங்களின் ரிலீஸ் இருக்கும் நிலையில் கேஜிஎஃப் 2 திரைப்படமா, பீஸ்ட் திரைப்படமா என நெட்டிசன்கள் வலைதளங்களில் மோதிக் கொண்டு வருகின்றனர்