விஜய்யை பற்றி அன்றே கணித்த சரத்குமார்.. 250வது வெற்றி விழாவில் நடந்த சுவாரசியம்

தளபதி விஜய் தற்போது தன்னுடைய 66 ஆவது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 66 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை வம்சி பைடிபைலி இயக்குகிறார். இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கிறது.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் நடிக்கிறார். அதேபோல் இப்படத்தில் விஜய்யின் அப்பாவாக சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.

மேலும் இப்படம் ஒரு சென்டிமென்ட் கலந்த குடும்ப படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் ஆக்ஷன், ரொமான்ஸ், சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்திருக்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து ஆக்ஷன் படங்களிலேயே நடித்து வரும் விஜய் தற்போது மீண்டும் சென்டிமென்ட் படத்தில் நடிப்பதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சரத்குமார் இப்படத்தை பற்றி கூறுகையில் தளபதி 66 படம் மிகவும் சக்தி வாய்ந்த கதையாக உள்ளது. மேலும், இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என கூறியிருந்தார். விஜயுடன் இணைந்து நடிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. கமலா தியேட்டரில் சூரியவம்சம் படத்தின் 250வது வெற்றி நாளில் விஜய்யை நான் சந்தித்தேன்.

அப்போது மேடையிலேயே அடுத்த சூப்பர் ஸ்டாராக விஜய் வருவார் என நான் கணித்தேன். அதைப்பற்றி இப்போது விஜய்யும், நானும் பேசினோம். மேலும் நான் சொன்னது சரிதான் என்பதில் இப்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என சரத்குமார் கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் இரு அண்ணன் கதாபாத்திரங்களில் ஒருவராக ஷாம் நடிக்கிறார்.

மற்றொரு அண்ணன் கதாபாத்திரத்திற்கு பிரபல நடிகருடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. தளபதி 66 படத்தை இந்த ஆண்டு தீபாவளி அல்லது பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் இப்படத்திற்கான வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது.