விஜய்யை தாக்கி பேச நடுத்தெருவுக்கு வந்த SAC.. பஞ்சு அடிச்சு பஞ்சகம் பேசும் தளபதி தந்தையின் வீடியோ

தளபதி விஜய்யின் தந்தையான எஸ்ஏசி அவர்கள் சமீபத்தில் யார் இந்த எஸ்ஏசி என்ற யூடியூப் சேனலை ஆரம்பித்து தனது வாழ்க்கை பயணத்தை பற்றி பேச இருப்பதாக அறிவித்து இருந்தார். அதன்படி தற்போது சேனலை ஆரம்பித்து அதில் ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு சமூக வலைதளங்களை தன்னுடைய கவனத்திற்கு ஈர்த்து இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் பேசிய பேச்சு தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிளாட்பார்மில் எஸ்ஏசி எனத் தொடங்கும் அந்த வீடியோவில் எஸ்ஏசி அவர்கள் தி.நகர் ஸ்மார்ட் சிட்டி அருகில் உள்ள பிளாட்பார்ம் ஒன்றில் கையில் பாய். தலைகாணி போன்றவற்றை எடுத்து சென்று, பாயை விரித்து அதில் அமர்ந்து கொள்கிறார். என்ன பண்றாரு இவரு என்று பார்த்தபோது, 60 ஆண்டுகளுக்கு முன்பாக சினிமாவில் நான் காலடி எடுத்து வைக்கும் போது சென்னை வந்து நான் தங்கிய முதல் இடம் இதுதான் என்று அந்த இடத்தை நினைவுகூறுகிறார். அதன் பிறகு தான் பட்ட கஷ்டத்தை ஒவ்வொன்றாக எஸ்ஏசி அவர்கள் சொல்ல ஆரம்பிக்கிறார்.

சென்னைக்கு வந்த புதிதில் மொத்தமாக 47 நாட்கள் இந்த பிளாட்பாரத்தில் இவர் தங்கியிருந்ததால் இதனை தன்னால் மறக்க முடியாது என்பதால் மாதத்திற்கு ஒரு முறையாவது இந்த இடத்தில் வந்து படுத்து உறங்கி விட்டு செல்வதாகவும் எஸ்ஏசி கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும், அவர் நான் எப்போதும் பழசை மறப்பவன் அல்ல என்றும், நான் இப்போது மிகவும் வசதியாக இருக்கிறேன். ஆனால் நான் முதலில் ஆரம்பித்த இடம் இதுதான் என்றும் பேசியிருந்தார்.

அதுவரை தன்னுடைய வாழ்க்கை பயணத்தை பற்றி பேசிய எஸ்ஏசி இறுதியாக சொன்ன சில வார்த்தைகள் தளபதி விஜய்யை சீண்டிபேசுவதாக இருந்தது. இன்று பெரிய ஆளாக இருந்தாலும் நாம் 60 வருடத்திற்கு முன்பு இங்கு தான் நம்முடைய திரைப் பயணத்தை ஆரம்பித்தோம். அதனால் நாம் எவ்வளவு உயரம் சென்றாலும் இதனையும், நம்மை சினிமாவில் தூக்கிவிட்டவர்களையும் நாம் என்றும் மறந்து விடக்கூடாது என்று எஸ்ஏசி தளபதி விஜய்க்கு சொல்வது போல கூறியிருந்தார்.

இந்த சேனல் ஆரம்பிக்கும் முன்பே எஸ்ஏசி அவர்கள் தளபதி விஜய்யோடு ஏற்பட்ட உரசல் காரணமாக தான் தனியாக இப்படி பல செயல்களை செய்ய ஆரம்பித்துவிட்டார் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கூறப்பட்டது. மேலும் இந்த முயற்சியில், விஜய் பற்றிய பல விஷயங்களை ரசிகர்களுக்கு சொல்லப் போகிறார் என்றும் வெகுவாக பேசப்பட்டது. ஆனால் ஆரம்பமே களைகட்டும் அளவிற்கு பற்ற வைத்து இருக்கிறார் எஸ்ஏசி.

தற்போது இவர் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதிலிருந்து இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. பலரும் அவருக்கு அந்த வீடியோவில் கமெண்ட் செய்து வருகின்றனர். போற போக்கை பார்த்தால் இதை வைத்து இவர் பல விஷயங்களை வெளியில் சொல்லி தளபதிக்கு மேலும் தலைவலி கொடுப்பார் என்று தான் தெரிகின்றது.